ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9pm - ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news@ 9 pm
top 10 news@ 9 pm
author img

By

Published : Feb 21, 2021, 9:09 PM IST

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - தலை தப்புமா நாராயணசாமி அரசு?

புதுச்சேரியில், துணை நிலை ஆளுநர், கிரண் பேடியை அமர்த்திய நாளிலிருந்தே, அரசியலில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன. இது, உச்சத்தை தொட்டுள்ளது.

திருவள்ளுவருக்கு ‘உச்சிக் குடுமி’ - வைகோ கண்டனம்!

திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, உச்சிக் குடுமி வைத்து, ஆரிய சித்தாந்தவாதி ஆக்கிவிடத் துடிக்கும் சனாதனக் கூட்டத்தின் முயற்சி முறியடிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மெட்ரோ நீட்டிப்பு பணிகளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

நோபரா - தக்ஷிணேஸ்வர் வரையிலான மெட்ரோ ரயிலின் நீட்டிப்புப் பணிகளை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு உதவும் 'இன்ஸ்டியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா'

மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு 'இன்ஸ்டியூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பு புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைகிறது.

குப்பையை அள்ளுவதற்கு ரூ.1.5 கோடி செலவு; இதுதான் இவர்கள் திட்டம்: திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி விமர்சனம்

திங்கள்(பிப்.22) காலை 10 மணிக்கு திமுக சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி கூறியுள்ளார்.

நெல் வைக்கோலை அரசே நேரடி கொள்முதல் செய்ய கோரிக்கை

அறுவடை செய்த நெல் வைக்கோல்களை தமிழ்நாடு அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தாண்டு இறுதிக்குள் புதிய பாம்பன் ரயில் பால பணி நிறைவடையும்

புதிய பாம்பன் ரயில் பாலம் பணி இந்த ஆண்டு இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக, மதுரை மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் தெரிவித்துள்ளார்.

எங்களை கருணை கொலை செய்யுங்கள் - கதறும் பார்வை திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகள்!

பார்வை குறைந்த தங்களுக்கு அரசுப் பணி வழங்க முடியாவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று எங்களைக் கருணை கொலை செய்யுங்கள் எனத் தொடர்ந்து 5ஆவது நாளாகப் போராட்டம் நடத்திவரும் மாற்றுத்திறனாளிகள் செய்தியாளர்களிடம் கதறுகின்றனர்.

யானையை கொடூரமாகத் தாக்கும் பாகன் - பணியிடை நீக்கம் செய்த அரசு

யானைகள் புத்துணர்வு முகாமில், யானையைப் பாகன்கள் கடுமையாகத் தாக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதில் தொடர்புடைய பாகன் வினில் குமாரை அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

‘இது நான் விரும்பிய போட்டி அல்ல’ - டேனில் மெத்வதேவ்

இது நான் விரும்பிய போட்டி அல்ல என்றும், அனைத்து பெருமையும் ஜோகோவிச்சையே சாரும் என்றும் ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனில் மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.