1.கேரள வெள்ளம்: அடித்தளத்துடன் அடித்துச் செல்லப்படும் வீடு!
கேரளா மாநிலம், கோட்டயத்தில் பெரும் மழையின் காரணமாக பல வீடுகள் நிலைகுலைந்து சரிந்து விழுந்தது. இந்நேரத்தில், முண்டகாயம் பகுதியில் ஜெபி என்பவரின் வீடு காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2.'நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்க' - முதலமைச்சர் ஸ்டாலின்
கனமழையால் சேதமடைந்த மாவட்டங்களில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதுடன், அவர்களுக்கான நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
3.கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு 12ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணிகள்
கேரளா மாநிலம், கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
4.'கே.பி. பார்க் குடியிருப்பு பாதிப்புகள் முழுமையாக சரிசெய்யப்பட்டுவிட்டன' - கட்டுமான நிறுவனம் விளக்கம்
புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் ஏற்பட்டப் பாதிப்புகள் முழுமையாக சரிசெய்யப்பட்டுவிட்டதாக, கட்டுமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
5.சேவையிலும் தானத்திலும் சிறந்தது மனித உயிரை காக்கும் ரத்த தானமே..! - பி.ஆர். பாண்டியன்
மன்னார்குடி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தார்.
6.கோவை குற்றால அருவி மீண்டும் மூடப்பட்டது
வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவை குற்றால அருவி மீண்டும் மூடப்பட்டுள்ளது.
7.பி.இ., பி.டெக் கலந்தாய்வு - கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை அதிகளவு தேர்வு செய்த மாணவர்கள்!
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இந்தாண்டு கம்பியூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவை அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
8.சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று டிஸ்சார்ஜ்
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார்.
9.மதுரையில் அக்.20 ஆம் தேதி கல்விக் கடன் மேளா!
மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், பிற பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவும் வகையில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி கல்விக் கடன் மேளா நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.
10.2003இல் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாய் மீது தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு
விருத்தாசலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.