1. கரோனா தடுப்பூசி செலுத்த நுண் செயல் திட்டம்
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுண் செயல்திட்டம் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவுப்படுத்தி உள்ளோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
2. சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!👧
பெண் குழந்தைகளுக்கான உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறவும், அவர்களின் வெற்றிகளைக் கொண்டாடவும் அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
3. வரதட்சணை கொடுமையால் பெண் மரணம்: கொலையா, தற்கொலையா?
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கொடுத்துள்ள புகாரின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
4. 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. திருப்பத்தூர் அருகே மனைவியை பெட்ரோல் ஊற்றி கொன்றவர் கைது
திருப்பத்தூர் அருகே மனைவியைப் பெட்ரோல் ஊற்றி, கொலை செய்துவிட்டு, தஞ்சாவூரில் தனி வீடு எடுத்து மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்த நபரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
6. 'பாரம்பரிய விளையாட்டை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை'
கிராமப்புற கலைகள், பாரம்பரிய விளையாட்டை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
7. அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் அமைச்சரிடம் புகார்!
அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் புகார் தெரிவித்தனர்.
8. வரதட்சணை கொடுமையால் பெண் மரணம்: கொலையா, தற்கொலையா?
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கொடுத்துள்ள புகாரின்பேரில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
9. மலர் காதலன் ஜார்ஜுக்கு இன்று பிறந்தநாள்
பிரேமம் காதநாயகன் நிவின் பாலி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இவருக்கு பல திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.
10. கோப்பையை நோக்கி தோனி அடித்த ஷாட்: Finals'ல் சென்னை 🕺🏽
உத்தப்பா, ருதுராஜ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தாலும், கேப்டன் தோனியின் மிரட்டலான ஃபினிசிங்காலும், டெல்லி அணியை வீழ்த்தி 9ஆவது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.