ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 9 am
காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM
author img

By

Published : Apr 8, 2021, 9:01 AM IST

2ஆம் டோஸ் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட பிரதமர்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் செலுத்தப்பட்டது.

திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12ஆம் தேதிமுதல் இலவச தரிசனம் ரத்துசெய்யப்படுவதால், கோயிலுக்குச் செல்ல திட்டம் போட்ட பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் தலைநகரில் நாளைமுதல் முழு பொதுமுடக்கம்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நாளைமுதல் (ஏப். 9) முழு பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.

உ.பி.யின் முக்கிய நகரங்களில் இரவு நேர பொதுமுடக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரங்களான லக்னோ, வாரணாசி, கான்பூரில் இன்றுமுதல் (ஏப். 8) இரவு நேர பொதுமுடக்கம் உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

வனவிலங்குகளை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் - வன ஆர்வலர்கள்

வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், வனப்பகுதிகளில் தண்ணீர்த் தொட்டி அமைத்து வனவிலங்குகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

கரோனா: முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

கரோனா தொற்றின் தீவிரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 8) அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்கிறார்.

தேர்தல் வாகனத்தை 'ப்ளாக்' செய்த பலே யானைகள்!

ஈரோடு கேர்மாளம் சாலையில் வாக்குப்பதிவு இயந்திங்களைக் கொண்டுசென்ற லாரியை யானைகள் வழிமறித்தன. இதனால் 2 மணி நேரம் வரை வாக்கு இயந்திரங்கள், தேர்தல் அலுவலர்களுடன் லாரி காத்திருக்க நேர்ந்தது.

பள்ளிகளில் கரோனா பரவல் அதிகரிப்பு: முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றம்

பள்ளிகளில் கரோனா தொற்று அதிகளவில் பரவியதையடுத்து, கோவை, தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நள்ளிரவில் சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்: 4 வீரர்கள் படுகாயம்!

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள லெபனான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

'என்ஜாய் எஞ்ஜாமி' ரிப்பீட் மோடில் ரன்வீர் சிங்

கரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.