ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 9 am
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM
author img

By

Published : Mar 18, 2021, 9:13 PM IST

’கரோனா தடுப்பூசி போடும் பணியில் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும்’

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசாங்கம் தனித்துச் செயல்படுவதை விடுத்து, தன்னார்வலர்களையும் அந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். கரோனா இரண்டாம் அலைக்கு முன்னர் இதைச் செய்வது சாலச் சிறந்தது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

செஞ்சியில் வெகு விமரிசையாக நடைபெற்ற மாசி தேர்த் திருவிழா!

செஞ்சி அடுத்த பிரசித்திப் பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசி தேர்த் திருவிழா நடைபெற்றது.

முதல் படை வீட்டில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனிப் பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

சென்னைவாசிகளுக்கு நற்செய்தி: இந்தக் கோடையில் தடையின்றி குடிநீர்!

ஏரிகளில் தண்ணீர் அளவின் கொள்ளளவு முழுமையாக இருப்பதால், இந்த ஆண்டு மாற்று வழி ஆதாரமான நிலத்தடி நீர்வள ஆதாரம், விவசாய ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவையை தேட குடிநீர் வழங்கல் வாரியத்திற்குத் தேவை இருக்காது.

'ஐ எம் ஸாரி பிஎம்'- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு!

டெல்லியில் ஆளுநருக்கு அதீத அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த மம்தா பானர்ஜிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.

ரூ.60 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்: இது டெல்லி சிறப்புப் படையின் அதிரடி நடவடிக்கை!

டெல்லி காவல் துறையின் சிறப்புப் படை நடத்திய அதிரடி சோதனையில், 60 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

நெல்லை இளைஞர் கொலை வழக்கு: கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

வைக்கோல் அடைத்து வைக்கும்போது ஏற்பட்ட தகராறில், இளைஞரைக் கொலைசெய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, நெல்லை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ராஜாவுக்கு ராஜாடா' படத்தில் அப்பாவாக நடிக்கும் கிஷோர்!

வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்த கிஷோர் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் 'ராஜாவுக்கு ராஜாடா' என்னும் படத்தில் நடிக்கவுள்ளார்.

மணாலியில் ஊர்வசி ரவுத்தேலாவுடன் ரொமான்ஸ் செய்யும் லெஜெண்ட் சரவணன்!

லெஜண்ட் சரவணன் மணாலியில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுடன் நடிக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

'வெனம் 2' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

'வெனம் 2' படத்தின் புதிய வெளியிட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.