ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 Am - Top news today

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @9 Am
Top 10 news @9 Am
author img

By

Published : Jan 14, 2021, 9:28 AM IST

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது - பார்வையாளராக ராகுல்காந்தியும் பங்கேற்கிறார்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை மதுரையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. அதில் சீறி பாயும் காளைகளை வீறு கொண்டு காளையர்கள் அடக்குவதைக் கண்டு ரசிப்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனி விமானத்தில் மதுரைக்கு வருகை புரிகிறார். அவருடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.

பொங்கல் பண்டிகை: தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களுக்கு தனது சமூக வலைதளம் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

83 தேஜஸ் விமானங்கள் வாங்க ரூ.48,000 கோடிக்கு ஹெச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம்

83 தேஜஸ் விமானங்கள் வாங்க ரூ.48,000 கோடிக்கு ஹெச்.ஏ.எல். நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

‘திருவண்ணாமலையில் மஞ்சு விரட்டுக்குத் தடை’- எஸ்பி அரவிந்த்!

திருவண்ணாமலை: இந்தாண்டு நடைபெறும் மஞ்சுவிரட்டு, எருது விடுதல் உள்ளிட்ட விழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

தரங்கம்பாடியில் பெய்யும் கனமழையால் 35 வீடுகள் சேதம்!

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பகுதியில் தொடர்ந்து கொட்டித் தீர்க்கும் கனமழையால் குடியிருப்புப் பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது. சுமாராக 35 வீடுகள் சேதமடைந்துள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை தாரைவார்க்கும் மத்திய- மாநில அரசுகள் - காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு!

சென்னை: 82 கிராம மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், 35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கான “மக்கள் கருத்துக் கேட்பிற்கான” கூட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

யுபிஎஸ்இ தேர்வர்களுக்கு வழிகாட்டும் இளம் ஐபிஎஸ் அலுவலர் அங்கிதா சர்மா!

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது ஒவ்வொரு போட்டியாளரின் கனவு, ஆனால் உரிய வழிகாட்டுதல் இல்லாததால் பலரால் இதில் வெற்றிபெறவில்லை. இதேபோன்ற சூழ்நிலையைச் சந்தித்திருந்தார் ஐபிஎஸ் அலுவலர் அங்கிதா சர்மா. அப்போது, தாம் அரசு அதிகாரி ஆகிவிட்டால், போட்டித் தேர்வில் மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று உறுதிஎடுத்துக்கொண்டார். யுபிஎஸ்இ உள்ளிட்ட போட்டித் தேர்வர்களுக்கு வழிகாட்டும் இளம் ஐபிஎஸ் அலுவலர் அங்கிதா சர்மா குறித்து பார்க்கலாம்.

ட்ரம்ப்புக்கு கெட் அவுட் சொன்ன அமெரிக்க நாடாளுமன்றம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ட்ரம்ப்பை நீக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையானோர் வாக்களித்துள்ளனர்.

தாய்லாந்து ஓபன்: இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார் சாய்னா!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றுப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் வெற்றி பெற்றார்.

'பிரிஸ்பேன் டெஸ்ட்டில் பும்ரா இல்லாதது பின்னடைவே' - இர்ஃபான் பதான்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.