ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 News
Top 10 News
author img

By

Published : Sep 27, 2021, 7:03 PM IST

'சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் எனும் தகவல் தவறு' - அமைச்சர் செந்தில் பாலாஜி

'மின்னகம்' திறக்கப்பட்டு 100 நாள்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சேகர் ரெட்டி டைரியில் அவர் பெயர் இருந்ததாகக் கூறும் தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள்

மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சோமு, ராஜேஷ் குமார் ஆகியோருக்கு சட்டப்பேரவை செயலர் சீனிவாசான் சான்றிதழ் வழங்கினார்.

'திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை பட்டியலாக வெளியிட வேண்டும்' - ஜெயக்குமார்

திமுக நிறைவேற்றியதாக கூறிய 202 வாக்குறுதிகளை பட்டியலாக வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ருத்ர தாண்டவம் சிறப்புக் காட்சி: சீமானை தரக்குறைவாக பேசிய ஹெச். ராஜா

ருத்ர தாண்டவம் படத்தின் சிறப்புக் காட்சி முடிந்து செய்தியாளரை சந்தித்த ஹெச். ராஜா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தரக்குறைவாக பேசியுள்ளார்.

திரைப்படப் பாடல் மெட்டில் அறிவியல் பாடங்கள் கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்

மயிலாடுதுறை: திரைப்படப் பாடல் மெட்டில் இசையுடன் பாடல்களைப் பாடி, அறிவியல் பாடங்களை கற்பிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியரை மாணவர்கள், பெற்றோர் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

முதலமைச்சரைப் பார்த்தது 'ரொம்ப ஹேப்பி' - சிறுமி ஜனனி

சென்னை: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட, சேலம் சிறுமி ஜனனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.27) ஸ்டான்லி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் முதலமைச்சர் தன்னை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி என சிறுமி தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை - கனிமொழி

திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர் அதிரடி

கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகளை திரும்பப் பெற முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் 'லைகர்': அறிமுகமாகும் பாக்சிங் ஜாம்பவான் மைக் டைசன்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகும் 'லைகர்' படத்தில் பாக்சிங் ஜாம்பவான் மைக் டைசன் நடிக்கிறார். இதன் மூலம் அவர் இந்திய சினிமாவில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.

சென்னையில் ஒரு சாலைக்கு நடிகர் நாகேஷ் பெயரைச் சூட்ட வேண்டும் - கமல்ஹாசன்

சென்னையில் ஒரு சாலைக்கு நடிகர் நாகேஷ் பெயரைச் சூட்ட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.