ETV Bharat / state

7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 PM - Top 10 new

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம் இதோ...

7 மணி செய்திச்சுருக்கம்
7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 10, 2020, 7:19 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 5,528 பேருக்கு கரோனா பாதிப்பு

கரோனாவால் இன்று (செப்.10) பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ' தமிழ்நாட்டில் கரோனாவால் மேலும் 5,528 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 86ஆயிரத்து 52ஆக அதிகரித்துள்ளது.

'தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும்' - அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

’வெறும் வாய்க்கு அவல் அள்ளிப்போடுவதைத் தவிருங்கள்’ - தொண்டர்களுக்கு ஸ்டாலின் மடல்

சென்னை: அடுத்து அமையவிருப்பது திமுக அரசு தான் என்று மக்கள் மனதில் ஏற்கனவே எழுதியுள்ள தீர்ப்பை, வாக்குப்பதிவு நாளில் உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்றிட வேண்டும் என தனது கட்சியினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

'நீட் தேர்வில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற திமுக, அதிமுக உண்மையாக முயற்சிக்க வேண்டும்'

சென்னை: மக்களை ஏமாற்ற நினைப்பதை விடுத்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களைக் காப்பாற்ற அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுகவும், அதிகாரத்திலுள்ள அதிமுக அரசும் உண்மையாக முயற்சிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தின் சந்தையான கன்னட சினிமா உலகம் - அதிர்ச்சித் தகவல்!

பெங்களூரு: தடை செய்யப்பட்ட போதைப்பொருளை கன்னட திரை பிரபலங்கள், விவிஐபிக்களுக்கு விற்பனை செய்த மாஃபியாவைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளி ஒருவரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் (சிசிபி) கைது செய்துள்ளனர்.

'மாநில அரசுகளுக்கு வேண்டியது கடன் அல்ல' - சிதம்பரம் சாடல்

டெல்லி: மாநில அரசுகளுக்கு வேண்டியது மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தானே தவிர, கடன் அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

'சீன நிறுவனங்களுடனான வணிக ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்யுங்கள்' - அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்க அரசால் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சீன நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்யுமாறு தென்கிழக்கு ஆசிய நாடுகளிடம் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மைக் பாம்பியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

பெய்ரூட்டில் மீண்டும் ஒரு பெரும் தீ விபத்து - பீதியில் லெபனான் மக்கள்!

பெய்ரூட்: துறைமுகம் அருகே உள்ள டயர் மற்றும் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து மக்கள் மத்தியில் மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் உள்ளூர் போட்டிகளில் யுவராஜ்? பிசிசிஐ விதிகள் கூறுவது என்ன?

அதிரடி கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட பிசிசிஐயின் விதிகள் தடையாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“அதற்கு எப்படி நான் பொறுப்பாக முடியும்”- ராவத் அடித்த அந்தர் பல்டி!

மும்பை: கங்கனா ரணாவத்தின் தயாரிப்பு நிறுவன அலுவலகம் இடிக்கப்பட்டதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.