ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம்- Top 10 News@7AM - அண்மை செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம்- Top 10 News@7AM

author img

By

Published : Jun 5, 2021, 7:21 PM IST

திடீர் மூச்சுத் திணறல்- ஐசியூவில் மில்கா சிங்!

திடீர் மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மில்கா சிங்கின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வண்டலூர் பூங்காவைச் சுற்றிவரும் கரோனா; 2 சிங்கங்கள் கவலைக்கிடம்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு சிங்கங்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலியல் தொல்லை: ராஜகோபாலன் ஜாமீன் மனு ரத்து!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் பிணை மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பரில் கோவிட் மூன்றாம் அலை? எச்சரிக்கும் நிதி ஆயோக்

வரும் செப்டம்பர் மாதத்தில் கோவிட் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்

போலியாக அத்தியாவசியப் பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி சென்ற வாகனங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றித் திரிந்த பொதுமக்களுக்கு அந்த இடத்திலேயே கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. போலியாக அத்தியாவசிய பணியாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டி சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

கரோனாவுக்கு சீனாவை குறை சொல்வது தவறு: ஊடகம் மூலம் அமெரிக்காவை சாடும் ரஷ்யா

கரோனா பாதிப்புக்கு சீனாவை குறை சொல்வது தவறு என ரஷ்ய ஊடகம் அமெரிக்காவை சாடியுள்ளது.

மீண்டும் ஒரு லட்சம் கோடியை தாண்டிய மே மாத ஜி.எஸ்.டி. வசூல்

ஜி.எஸ்.டி வசூல் தொடர்ந்து எட்டாவது மாதமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரசிகர்களின் ’ராணி’ ரம்பாவுக்கு பிறந்தநாள்: சமூக வலைதளங்களில் கொண்டாட்டம்

தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ரம்பாவின் 47ஆவது பிறந்த நாளை, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு - டெல்லி உயர் நீதிமன்றம் வேதனை

கரோனா இரண்டாவது அலையின் போது நடைபெறும் சம்பவங்கள் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை பார்க்கும் போது மிகுந்த வேதனை அளிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனை கண்டு பொறுப்புள்ள குடிமகன்களும் வேதனைப்படுவார்கள் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

வெங்கையா நாயுடுவுக்கு மீண்டும் 'ப்ளூ டிக்'- திருப்பிகொடுத்த ட்விட்டர்!

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மீண்டும் ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் திருப்பி அளித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.