1. பெங்களூரு தீ விபத்து - பெண் உயிரிழப்பு; பலர் சிக்கித்தவிப்பு
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தேவரசிக்கனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சமையல் எரிவாயு கசிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெண்மணி உயிரிழந்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பினுள் மேலும் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
2. ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பட்டதாரி தூய்மைப் பணியாளருக்கு அரசு வேலை!
ஈடிவி பாரத் ஊடகத்தின் செய்தி எதிரொலியாக முதுநிலைப் பட்டதாரியான தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு அரசு வேலையை ஒதுக்கி, அதற்கான பணிநியமன ஆணையை தெலங்கானா மாநில அமைச்சர் ராமா ராவ் வழங்கியுள்ளார்.
3. வேலையில்லாதவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் - கெஜ்ரிவால் வாக்குறுதி
கோவாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
4. ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படைகளை அமைக்க உத்தரவு
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படைகளை அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
5. கடிதம் மூலம் பிடிஆர்-ஐ கண்டித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
ஜிஎஸ்டி கூட்டத்தில் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காமல் இருந்தது, தமிழ்நாடு மக்களுக்கு செய்கின்ற துரோகம் அல்லவா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
6. 'நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் விரைவாக ஒப்புதல் அளிப்பார்'
நீட் விலக்கு மசோதாவிற்குப் புதிய ஆளுநர் விரைவாக ஒப்புதல் வழங்குவார் என நம்புவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
7. நியாய விலைக்கடைகளில் மக்களை அலைக்கழித்தால் நடவடிக்கை - அரசு எச்சரிக்கை
நியாய விலைக்கடைகளில், குடும்ப உறுப்பினர்களை அலைக்கழித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
8. காரில் இருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து - 10 வீடுகள் சேதம்
தூத்துக்குடியில் காரில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கார் முற்றிலுமாக எரிந்த நிலையில், அருகிலிருந்த பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
9. வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10. கனடா தேர்தல்: ஜஸ்டின் ட்ரூடோ ஹாட்ரிக் வெற்றிபெற்றும் தொடரும் சோகம்...!
கனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு மூன்றாவது முறையாக வென்று பிரதமராக உள்ளார். இருப்பினும், அவருடைய லிபரல் கட்சிக்கு இம்முறையும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை.