ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 7 pm - இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 16, 2021, 7:07 PM IST

1. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் விராட்!

இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

2. வரி கட்டினார் விஜய் - அரசு விளக்கம்

நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

3. நல்ல நேரம் போஸ்ட் - துரைமுருகன் மகனுக்கு கெட்ட நேரம்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்குள் பாமகவை கொண்டுவர துரைமுருகன் தீவிரமாக முயற்சித்ததாக பேச்சு அடிபட்ட சூழலில் கதிர் ஆனந்தின் இந்தப் பதிவு திமுகவின் பொதுச்செயலாளரும், அவரது மகனும் சாதிய மனப்பான்மையில் இருப்பதாகவே கருத தோன்றுகிறது என்கின்றனர் ஒரு தரப்பினர்.

4. பள்ளிகள் திறப்பு: முதலமைச்சர் முடிவெடுப்பார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் முடிவெடுத்து அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

5. புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடக் கோரிய வழக்கு - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடக் கோரிய வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

6. SPACEX: விண்வெளிக்கு சுற்றுலா சென்றிருக்கும் நால்வர்!

விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அனுப்பும் எலான் மஸ்க்கின் 'ஸ்பேக்ஸ் எக்ஸ்' நிறுவனம் மூலம் நான்கு பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

7. புதிய பாதுகாப்பு அலுவலக வளாகங்கள் திறப்பு

டெல்லி கஸ்தூரிபாய் காந்தி மார்க் மற்றும் ஆப்பிரிக்க அவென்யூ பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அலுவலக வளாகங்களை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

8. டிஜிட்டல் ஊடக கண்காணிப்பு புதிய விதிக்கு இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் ஊடகங்களை ஒன்றிய அரசு கண்காணிக்க வகை செய்யும், புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. பெரியார் பிறந்தநாள் - உறுதியேற்க அழைக்கும் திருமாவளவன்

சென்னை: பெரியார் பிறந்தநாள் அன்று அனைவரும் உறுதிமொழி ஏற்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

10. பீமா கோரேகான் வழக்கு - விடுதலை இயக்கம் மனித சங்கிலி போராட்டம்

பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி விடுதலை இயக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.