ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News@ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 News@ 7 PM
Top 10 News@ 7 PM
author img

By

Published : Jul 20, 2021, 6:57 PM IST

Updated : Jul 20, 2021, 7:06 PM IST

1.நாடாளுமன்றத்தில் சூடுபிடிக்கும் பெகாசஸ்: இரு அவைகளும் தொடர் ஒத்திவைப்பு

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.

2.சுதந்திர தினத்தன்று ட்ரோன் தாக்குதலுக்கு வாய்ப்பு!

செங்கோட்டையில் 4 ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நிறுவப்படவுள்ளது. காவலர்களுக்கு ட்ரோன் தாக்குதலைச் சமாளிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

3.இது வைரஸ் சீசனா? மனிதர்களைத் தாக்கும் புதிய 'நோரோ வைரஸ்'

இங்கிலாந்து நாட்டில் தற்போது 'நோரோ வைரஸ்' பரவல் அதிகரித்துவருவதாக அந்நாட்டு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

4.ரூ.17,141 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்தமுறை தென்கோடி வரை...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.17,141 கோடி முதலீட்டில் 35 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

5.பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, பகுதி நேரப் படிப்புகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

6.உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்வழிப் பாடநூல் - திண்டுக்கல் ஐ. லியோனி

உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ்வழிப் பாடநூல் அச்சிடும் பணி தொடங்கவுள்ளதாகத் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்துள்ளார்.

7.’முதலமைச்சரின் குல தெய்வ கோயிலை இடிக்கக் கேட்டால் சரி என கூறுவாரா’ - ஆதினங்கள் கேள்வி

முதலமைச்சரின் குல தெய்வ கோயிலை இடிக்கக் கேட்டால் சரி எனக் கூறுவாரா என கோயில்கள் இடிக்கப்படுவது குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது ஆதினங்கள் கேள்வி எழுப்பினர்.

8.ஈரோடு பெரும்பள்ள ஓடையில் கட்டுமான பணிக்குத் தடை நீட்டிப்பு

சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ஈரோடு பெரும்பள்ள ஓடையில் கட்டுமானங்கள் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9.காஷ்மீரில் 30 கிலோ ஐஇடி வெடிகுண்டு கண்டெடுப்பு!

ஸ்ரீநகர் தங்புரா பந்த் பகுதி அருகே 30 கிலோ ஐஇடி வெடிகுண்டு, பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

10.சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Last Updated : Jul 20, 2021, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.