ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm
7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm
author img

By

Published : Jun 10, 2021, 7:22 PM IST

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் ஜூன் 14ஆம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே அனைத்து பிரிவுகளும் செயல்பட வேண்டும் என, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்

கரோனா நிவாரணம்: ரூ.5 லட்சம் வழங்கிய அஸ்வின்ஸ் குழுமம்

பெரம்பலூர்: முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை அஸ்வின்ஸ் குழுமம் வழங்கியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத்திட்டம் : சிங்கார சென்னை 2.0!

சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கார சென்னை 2.0 கனவுத்திட்டம் எட்டு பிரிவுகளின் கீழ் 23 சிறப்பு திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

’பிரதமர் மோடிதான் டாப் தலைவர்’ - சிவசேனா சஞ்சய் ராவத்

இந்தியாவிற்கும் பாஜகவிற்கும் முன்னணி தலைவராக பிரதமர் மோடிதான் திகழ்கிறார் என சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்கவேண்டாம் - எம்பி சு.வெங்கடேசன்!

ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்கவேண்டாம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய ரயில்வே துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

63 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை விமானத்தில் கடத்தி வந்த இளைஞர் கைது

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு 63 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய ஒரு கிலோ 250 கிராம் தங்கத்தை கடத்தி வந்த இளைஞரை சுங்கத்துறை அலுவலர்கள் கைது செய்துள்ளனர்.

ஏழைகளுக்கான நிலங்களில் மணல் குவாரி இயங்க அனுமதித்தது எப்படி - நீதிமன்றம் கேள்வி

ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் தனியாருக்கு மணல் குவாரி நடத்த அனுமதி வழங்கியது எப்படி என கேள்வியெழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை, இதுகுறித்து துறை சார்ந்த அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர், உயிர் காக்கும் மருந்துகள், மாத்திரைகள் திருட்டு போனதையடுத்து, மருத்துவமனையை முற்றுகையிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தினர்.

மருத்துவமனையில் அழுகிய நிலையில் பெண் சடலம்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாடியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில், சடலத்தின் உடல் உறுப்பு மாதிரிகள் தடயவியல் துறைக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு- அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன்

சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.