கேப்டன் ஆனார் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஓயாது உழைத்தது வீணானது - அதிருப்தியில் கவுதமி, குஷ்பு ஆதரவாளர்கள்!
பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டு தீவிரமாக பணியாற்றி வந்த கவுதமி, குஷ்புவுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக அவர்களது ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
'பாஜகவால் உருவாக்கப்பட்டவர் கமல்' - முத்தரசன்
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி திமுகவின் வாக்குகளைப் பிரிக்க பாஜகவால் உருவாக்கப்பட்டது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திமுகவிற்கு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆதரவு!
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி வரும் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.
தேர்தலில் தனித்து நிற்கிறதா தேமுதிக?
எதிர்பார்த்த தொகுதிகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்ததால் அமமுகவுடனான கூட்டணி பேச்சை தேமுதிக நிறுத்திவிட்டதாகவும், ஆகையால் வரும் தேர்தலில் அக்கட்சி தனித்து நிற்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
'எனது ஓட்டு, எனது உரிமை' - சேலம் மாணவிகளின் விழிப்புணர்வு
அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவிகள் 'எனது ஓட்டு, எனது உரிமை' என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
'ஆங்கிலத்தில் கீதை' - பிரதமர் மோடி வெளியீடு
பகவத் கீதையின் ஆங்கில உரை மின்நூலை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி வெளியிட்டார்.
மருதூர் அருகே பறக்கும்படையினர் சோதனை- 2,57,000 ரூபாய் பறிமுதல்
குளித்தலை சட்டப்பேரவை தொகுதி மருதூர் அருகே பறக்கும்படையினர் நடத்திய சோதனையில், 2,57,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பணப்பட்டுவாடா புகார்! - 20 இடங்களில் சோதனை!
தேர்தல் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் மாநிலம் முழுவதும் 20 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
'இதுவெறும் ட்ரெய்லர்தான்' - முகேஷ் அம்பானிக்கு குறுஞ்செய்தி
மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகில் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம், 'வெறும் ட்ரெய்லர் மட்டுமே' என ஜெய்ஷ்-உல்-ஹிந்த் குழு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.