ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 7 PM - தேவேந்திரகுல வேளாளர்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்...

Top 10 News @ 7 PM
Top 10 News @ 7 PM
author img

By

Published : Feb 15, 2021, 7:04 PM IST

பரம்பரை, கொள்கை பகைவர்களை இத்தேர்தலில் சந்திக்கவுள்ளோம்- அதிமுக, பாஜகவை விளாசிய கனிமாெழி

பரம்பரை, கொள்கை பகைவர்களை இந்தத் தேர்தலில் சந்திக்கவுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுகவை வெற்றிபெறச்செய்ய திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்கவேண்டும் எனவும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவைக் கண்டித்த மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர்!

உத்தராகண்டில் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த கணவரை மனைவி கண்டித்ததால், முத்தலாக் சொன்ன சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வருகிற 25ஆம் தேதி கோவை பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பு

கோவையில் வருகிற 25ஆம் தேதி நடைபெறும் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் பாஜக இளைஞரணி மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பெரியகுளம் ஒன்றிய தலைவர் தேர்தல்: துணை முதலமைச்சரின் சொந்த ஊரில் திமுக வெற்றி!

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஊரில் நடந்த பெரியகுளம் ஒன்றிய தலைவர் தேர்தலில், அமமுக, தேமுதிக உதவியுடன் தலைவர் பதவியை திமுக கைப்பற்றியுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் குறித்து வெளிவந்துள்ள செய்திகள் தவறானவை!

சென்னை: பட்டியல் பிரிவிலிருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இளைஞர்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு பாஜக செவிமடுக்கவேண்டும் - ஸ்டாலின் காட்டம்

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான திஷா ரவி டெல்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின், இளைஞர்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு பாஜக செவிமடுக்காமல், இப்படி கொடுங்கோல் வழிகளைக் கையாள்வது அநாகரிகமானது என்று பதிவிட்டுள்ளார்.

ஆதிவாசி மக்களுடன் நடனமாடி அசத்திய எம்.எம்.ஏ ஆறுக்குட்டி!

கோயம்புத்தூர்: ஆனைகட்டி பகுதியில் ஆதிவாசி மக்களுடன் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவருக்கு நிபந்தனை ஜாமீன்!

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மியான்மரில் இணைய சேவை மீட்டெடுப்பு!

யாங்கூன்: மியான்மரில் நேற்றிரவு திடீரென இணையச் சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

தேமுதிக கூட்டணிக்கும் தயார், தனித்து போட்டியிடவும் தயார் - எல்.கே. சுதீஷ்

தேமுதிகவை பொறுத்த வரை வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக்கும் தயார், தனித்து போட்டியிடவும் தயார் என அக்கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.