அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு 90% நுரையீரல் தொற்று பாதிப்பு - மருத்துவமனை நிர்வாகம் தகவல்
கடந்த 13ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார். அப்போது லேசான கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று காலை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் கருவிகள் பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீண்டும் திமுக தலைவர் குறித்து கேலி சுவரொட்டிகள்: திமுகவினர் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: திமுக தலைவரை கேலி செய்யும் வகையில் ராமநாதபுரம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளன.
எல்லோருக்கும் உகந்த கருத்தைக் கூற வேண்டும்: திருமா பற்றி ஓ.எஸ்.மணியன் கருத்து
நாகை: எல்லோருக்கும் உகந்த கருத்தைக் கூறுவது தான் நன்மக்களுக்கு நல்ல பேரை தரும். இதுபோன்ற கருத்துக்கள் நல்லவர்களுக்கு தேவையில்லாத ஒன்று என திருமாவளவனின் மனுதர்ம சர்ச்சை பற்றி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மது, புகையிலை விற்பனை: 129 பேர் கைது
ராமநாதபுரம்: அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த 129 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ் நிறுவன தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் பாஜக தலைமைகள்
ராஷ்டிரிய சுயம் சேவா அமைப்பின் நிறுவன நாளையொட்டி, அதற்கு பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, முன்னாள் பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
'பிகார் முழுவதும் எனது குடும்பம்' - முதலமைச்சர் நிதிஷ்குமார்
பாட்னா: பிகார் முழுவதும் எனது குடும்பம், இம்மாநில மக்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள் என்று தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறினார்.
பயனர் தொழில்நுட்ப சாதனங்களின் சக்கரவர்த்தியான ‘சாம்சங்’ நிறுவனர் மரணம்!
சர்வேதச அளவில் கைபேசிகள், தொலைக்காட்சிகள், வீட்டு உபயோக பொருள்களின் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ இன்று (அக்டோபர் 25) காலமானார். அவருக்கு வயது 78.
போலியோவை விரட்டிய நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் இடம்பெறும் - உலக சுகாதார அமைப்பு
கராச்சி: ஆப்பிரிக்காவை போல், விரைவில் போலியோ இல்லாத நாடாக பாகிஸ்தானும் உருவாகும் என, உலக சுகாதார அமைப்பின் மூத்த அலுவலர் பலிதா மஹிபாலா கருத்து தெரிவித்துள்ளார்.
கெய்க்வாட் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது சிஎஸ்கே!
சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஐபிஎல் 2020: விக்கெட்டில் சதமடித்த சந்தீப்!
ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை ஹைதராபாத் அணியின் சந்தீப் சர்மா படைத்துள்ளார்.