ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

author img

By

Published : Sep 22, 2020, 7:02 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 7 pm
Top 10 news @ 7 pm

  • அண்ணா பல்கலை பெயர் மாற்றம்: நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆசிரியர்கள் முடிவு!

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தற்போதுள்ள பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதிதாக தோற்றுவிக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் எனப் புதிய பெயர் சூட்டப்படும் எனத் தமிழ்நாடு அரசு சட்ட முன்வடிவை கொண்டுவந்துள்ளது.

  • புதிய கல்விக்கொள்கை விவகாரம்: உயர் கல்வித் துறை செயலர் ஆலோசனை!

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக, உயர் கல்வித் துறை செயலர் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

  • "ஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட்களுக்கு விற்கும் முனைப்பில் மோடி அரசு செயல்படுகிறது" - க.பொன்முடி

விழுப்புரம்: நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்காமல் ஒட்டுமொத்த நாட்டையும் கார்ப்பரேட்களுக்கு விற்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறதென திமுக துணைப் பொதுச்செயலாளர் க. பொன்முடி கூறியுள்ளார்.

  • வேளாண் மசோதாவை ஆதரித்தது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்மை மசோதாவில் உள்ள மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு பாதுகாப்பான சட்டமாக இருக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

  • கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த இருவருக்கு அடி, உதை!

கோவை: பெண்ணிடம் செயின் பறித்த இருவரை, பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

  • மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவரின் உடல் 20 மணி நேரத்திற்கு பின் மீட்பு!

ஹைதராபாத்: மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சரூர் நகர் குளத்தில் மூழ்கியவரின் உடல் 20 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது.

  • 2008 பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு - ஒருவர் கைது

பெங்களூருவில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சோயிப் என்ற பயங்கரவாதியை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

  • ”மூடிய கதவுக்கு பின்னால்”- பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்த கஸ்தூரி!

சென்னை: நடிகை கஸ்தூரி தானும் பாலியல் தொல்லை அனுபவித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • ஐபிஎல் 2020: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் நேருக்கு நேர்...!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள நான்காவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

  • உலகளவில் 9 லட்சத்து 69 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு!

உலகளவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 69 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.