ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - சர்வதேசம்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7 pm news
7 pm news
author img

By

Published : Jun 26, 2020, 6:48 PM IST

சசிகலா குறித்து யோசிக்க நேரமில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு

தூத்துக்குடி: சசிகலாவை பற்றி யோசிப்பதற்கு தற்போது நேரமோ, அவசியமோ இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

'சாத்தான்குளம் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்' - கே.எஸ். அழகிரி

கடலூர்: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம்: மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்த கனிமொழி எம்.பி!

சென்னை: சாத்தான்குளத்தில் காவல் துறை விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்தது தொடர்பாக திமுக எம்.பி., கனிமொழி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் புகாரளித்துள்ளார்.

மதுரை மக்களை காக்க முதலமைச்சர் உடனடியாக உதவ வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை: தீவிரமடைந்து வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடும் மக்களை காக்க முதலமைச்சர் உடனடியாக உதவ முன்வர வேண்டும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கேடசன் வலியுறுத்தியுள்ளார்.

'மோடியின் அரசியல் கரோனாவை விட ஆபத்தானது' - சிவசேனா

மும்பை: ராணுவத்தின் பெயரைப் பயன்படுத்தி, வாக்கு சேகரிக்கும் மோடியின் அரசியல் கரோனாவை விட ஆபத்தானது என சிவசேனா விமர்சித்துள்ளது.

'இந்தியப் பகுதியில் சீனா நுழையவில்லை என்றால் 20 வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்?' - சோனியா கேள்வி

டெல்லி: இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் நுழையவில்லை என்றால், 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவிட்-19இல் இருந்து மீளலாம்; போதையில் இருந்து மீள முடியாது - ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை: இளைய தலைமுறையினருக்கு போதையினால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சீனாவின் சலாமி ஸ்லைசிங் யுக்தி - ஒரு பர்வை

சீனாவின் முக்கிய போர் தந்திர முறையான சலாமி ஸ்லைசிங் என்ற தாக்குதல் யுக்தி குறித்த சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம்

கரோனாவால் மீண்டும் தள்ளிப்போகும் கலிபோர்னியா டிஸ்னி அட்வென்ச்சர் பார்க் திறப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ் : கலிபோர்னியா டிஸ்னி அட்வென்ச்சர் பூங்கா ஜூலை மாதம் திறக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனா பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் காலவரையின்றி பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை கதி கலங்க வைத்த விமானப்படை வீரர் காலமானார்!

மும்பை: பாகிஸ்தானுக்கு எதிரானப் போரில், அந்நாட்டை கதி கலங்க வைத்த விமானப் படை உயர் அலுவலர் பர்வேஸ் ரஸ்தம் ஜமஸ்ஜி காலமானார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.