1. குமரியில் இளைஞர் ஆணவக்கொலை..?: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்!
காவல் நிலையம் சென்று திரும்பிய இளைஞர் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்த நிலையில், இறப்பிற்குக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
2. தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3. புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு - சென்னை மாநகராட்சி
மழை, வெள்ளப் பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார்களை, இந்த வாட்ஸ்அப் எண்களின் மூலம் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
4. பேபி அணை பகுதியில் 15 மரங்கள் வெட்ட கேரள அரசு அனுமதி வழங்கியதால்தான் முதலமைச்சர் நன்றி தெரிவித்தார் - துரைமுருகன்
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் மதகுகளைத் திறந்துவிட்டனர். இது பெரும் சர்சையைக் கிளப்பியது.
5.'மத சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்' - மனித உரிமை ஆணையம்
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், மத சுதந்திரத்தை உறுதி செய்ய அறிவுறுத்துமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
6.தமிழ்நாட்டில் ரெட் அலெர்ட்: தீவிர வெள்ளத்தடுப்பு நடவடிக்கையில் ஐஏஎஸ் அலுவலர் அமுதா;ஆய்வு செய்த அமைச்சர்
செங்கல்பட்டு மாவட்டம், ஆதனூரில் தொடங்கும் அடையாறு ஆற்றின் நீரோட்டம் மற்றும் முடிச்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மழைநீர் பாதிப்பு மற்றும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை ஐஏஎஸ் அலுவலர் அமுதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பணிகளை அமைச்சர் பெரியகருப்பனும் மேற்பார்வையிட்டார்.
7. சட்டப்பேரவை உறுப்பினருக்கு சுட்டிக்காட்ட 'படகுசவாரி' தொடங்கிய இளைஞர்
காமராஜ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற இளைஞர் படகை வைத்து தேவையானவர்களைப் படகில் அழைத்துச் சென்று தேவையான இடத்தில் விடுவதும், திரும்பக் கொண்டு விடுவதுமான உதவிகளைச் செய்து வருகிறார்.
8.படகுகள் மூலம் சென்று ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் - அமைச்சர் சா.மு.நாசர்
சென்னையில் நீர் தேங்கி உள்ள தாழ்வான பகுதிகளிலும் படகுகள் மூலம் சென்று ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.
9. 'ஜெய் பீம்' படத்திற்கு பாராட்டுத் தெரிவித்த தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்
'ஜெய் பீம்' படத்தில் உண்மை சம்பவத்தை துணிச்சலாக படமாக்கிய படக்குழுவினருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பாராட்டுத் தெரிவித்துள்ளர்.
10. INDIA'S T20 SQUAD: கேப்டனாகும் ரோஹித்; துணைக்கு ராகுல்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணைக் கேப்டனாக கே.எல். ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.