ETV Bharat / state

காலை7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 7 AM - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top 10 news at 7 am  top ten  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  7 மணி செய்திச் சுருக்கம்  காலை 7 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 5, 2021, 7:14 AM IST

1. ஈரோட்டில் மாணவனுக்கு கரோனா... அரசு பள்ளி மூடல்!

சத்தியமங்கலம் அருகே அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

2. திமுக அரசு சமூக நீதிக்கான அரசு - தொல். திருமாவளவன்

திமுக அரசு சமூக நீதிக்கான அரசு, சமூக நீதிக் களத்தில் திமுக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

3. டைனோசர் மாதிரிகளைக் கொண்டு பூங்கா- அமைச்சர் தங்கம் தென்னரசு

அரியலூர் அருங்காட்சியக வளாகத்தில் தானியங்கி டைனோசர் மாதிரிகளைக் கொண்டு திறந்தவெளியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கருப்பொருள் பூங்கா அமைக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

4. வெளிநாட்டினரையும் கவரும் வகையில் காட்சி படங்கள் வைக்க நடவடிக்கை!

வெளிநாட்டினரையும் கவரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பாக காட்சி படங்கள் வைக்கப்படும் என அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

5. மதுரை மேம்பால விபத்து - என்ஐடி வல்லுநர்கள் குழு ஆய்வு

மதுரை மேம்பால கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்து குறித்து என்ஐடி பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான வல்லுநர்கள் குழு ஆய்வு செய்தது.

6. 11 வயது சிறுமி உயிரிழப்பு; பிகாரில் மூன்றாவது அலை?

கோவிட் பெருந்தொற்று மூன்றாவது அலை குறித்து தேசிய பேரிடர் குழு நிறுவன வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் பிகாரில் 11 வயது சிறுமி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7. 10ஆம் வகுப்பு பாஸான 86 வயது மு. முதலமைச்சர்!

முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலா 10ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்றார். தற்போது அவருக்கு வயது 86 ஆகிறது.

8. பெங்களூருவில் பெண் வன்புணர்வு; இரு நைஜீரியன்கள் கைது!

பெங்களூருவில் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு நைஜீரியன்களை காவலர்கள் கைதுசெய்தனர்.

9. பாலியல் வன்புணர்வு, கருக்கலைப்பு - இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து, கருவைக் கலைத்த இளைஞருக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

10. ஹர்பஜன்சிங் நடித்த படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் நடித்து வரும் பிரண்ட்ஷிப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.