ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM - etv bharat

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jan 20, 2021, 7:08 AM IST

1 கடமையை செய்தால் மாற்றம் சாத்தியமாகும்- யார் இந்த கமலா ஹாரிஸ்!

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் (56), கலிபோர்னியா மாகாணத்தின் செனட் சபை உறுப்பினராக உள்ள அவர், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்கவுள்ளார்.

2 மகாபாரத கதைகளைச் சொல்லும் ஹரியானாவின் கிராமம்

ஹரியானா: மகாபாரதப் போரில் அர்ஜுனனின் மகன் அபிமன்யு இறந்த இடமாக கருதப்படுவது அபிமன்யுபூர் கிராமம் புராண காலத்தின் மிதமிஞ்சிய எச்சமாக மட்டுமல்லாமல் வீரம் செறிந்த வரலாற்றையும் தாங்கி நிற்கிறது.

3 நெல்லையப்பர் கோயில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது

நெல்லையப்பர் கோயில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது.

4 திருப்பத்தூரில் 42 பேருக்கு இலவச பட்டா வழங்கிய அமைச்சர் வீரமணி!

திருப்பத்தூர் மாவட்டத்தில் 42 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை அமைச்சர் கே சி வீரமணி திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் வழங்கினார்.

5 சென்னையில் 2020இல் 135 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

சென்னையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது போன்ற தொழிலில் ஈடுபடும் குழந்தைகளை மீட்பதில் குழந்தைகள் நலப்பாதுகாப்பு பிரிவு காவலர்கள் களம் இறங்கியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 135 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

6 தீவிர சிகிச்சை பிரிவில் அமைச்சர் காமராஜ்: நேரில் சந்திக்க இபிஎஸ், ஓபிஎஸ் வருகை

சென்னை: அமைச்சர் காமராஜ் உடல் நிலை மோசமாகி வருவதால், அவரை நேரில் சந்திக்க முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.

7 தர்பூசணி பழத்தில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் உருவம்!

தர்பூசணி பழத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரது உருவங்கள் வரைந்து தேனி காய்கறி சிற்பக் கலைஞர் அசத்தல்.

8 சோலார் பயன்பாட்டிற்கு ஆரம்பத்திலே முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறதா?

நாட்டில் புதுபிக்கக்கூடிய எரிபொருள் பயன்பாட்டினை ஊக்குவிக்க பல திட்டங்களை நடைமுறைபடுத்த அரசு என்னினாலும், அவற்றை செயல்படுத்துவதில் அரசு அலுவலர்களும், சில நடைமுறை சிக்கல்களும் ஆரம்பத்திலேயே முற்றுப் புள்ளியை வைக்கின்றனரா என்ற கேள்வி எழுந்து வருவதைத் தடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் சூரியசக்தி பயன்பாட்டிற்கு ஏற்படும் தடைகளை விளக்குகிறது இந்தக் கட்டுரை...

9 மருதமலை கோயில் திருக்கல்யாண நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை கோவிலில் திருக்கல்யாணம் மற்றும் தேர் இழுத்தல் நிகழ்விற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

10 தவறான சிகிச்சையால் கூலித்தொழிலாளி உயிரிழப்பு, மருத்துவமனைக்கு சீல்

திருநின்றவூர் அருகே தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையினாலும், அதிகமாக பணம் வசூலித்ததினாலும் ஒருவர் உயிரிழந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவமனையை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.