ETV Bharat / state

5 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 5PM - chennai district news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்தி சுருக்கம் இதோ..

Top 10 news @ 5PM
Top 10 news @ 5PM
author img

By

Published : Feb 11, 2021, 5:02 PM IST

கண்ணை மறைத்த பக்தி: தன்னை தானே குழிக்குள் புதைத்துக் கொண்ட பெண்!

லக்னோ: கடவுளிடம் முறையிட போறேன் என உத்தரப் பிரதேச பெண் ஒருவர் தன்னை தானே குழிக்குள் புதைத்துக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கமல்ஹாசன் வலியுறுத்தல்!

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள கடன்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே தேதியில் இரண்டு தேர்வுகள்! மாற்றக்கோரி சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்!

மதுரை: கிராம வங்கி அதிகாரி நியமன நேர்காணலும், கிளார்க் பணிக்கான இறுதித்தேர்வும் ஒரே நாளில் நடைபெறவுள்ளதை மாற்றக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

போலி ஆவணங்கள் பாஸ்போர்ட்: நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை: போலியான ஆவணங்களை கொடுத்து அகதிகள் பாஸ்போர்ட் பெறுவதை தடுக்க கோரிய வழக்கில், பாஸ்போர்ட் பெறுவதற்கு சோதனை செய்யும் காவல்துறை உட்பட அனைத்து துறை அலுவலர்களும் மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களவையில் நாளை பட்ஜெட் மீதான விவாதத்தில் பதிலளிக்கிறார் நிர்மலா சீதாராமன்!

மாநிலங்களவையில் நாளை பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கிறார்.

விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு நடராஜன் தேவைப்படுவார் என பிசிசிஐ கேட்டுக்கொண்டதையடுத்து, விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியிலிருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டார்.

பள்ளிகள் திறக்க ஆய்வுகள் நடத்தப்படவில்லை- செங்கோட்டையன்

எட்டாம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பதற்கு இதுவரை ஆய்வுகள் நடத்தப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் உலா வரும் போலி கணக்கு: ரோஜா சீரியல் நடிகை புகார்

சென்னை: சின்னத்திரை நடிகை ஷாமிலியின் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி அவதூறாக பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புவிசார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் விண்வெளி துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

பெங்களூரு: புவியியல் தீர்வுக்காக புவிசார் தொழில்நுட்ப நிறுவனமான சி.இ. இன்ஃபோ சிஸ்டம்ஸூடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை விண்வெளித் துறை கையெழுத்திட்டுள்ளது.

நடக்குமா அதிமுக-சசிகலா இணைப்பு? நடந்தால் திமுகவின் நிலை என்ன?

சென்னை: அதிமுக-சசிகலா இணைப்புக்கு வாய்ப்பே இல்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறிவரும் நிலையில், இவ்விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இணைந்தால் அது தேர்தலில் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.