1. அதிர்ந்து போன அதிகாரிகள்: ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2. தொழிற்கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - ஸ்டாலின்
அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
3. கிராம சபை கூட்டம் - அரசு அனுமதி
அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
4. சதானந்த கௌடாவின் சர்ச்சை வீடியோ - சீமானை மீண்டும் சீண்டிய ஜோதிமணி எம்பி
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சதானந்த கௌடாவின் சர்ச்சை வீடியோ வெளியானதை தொடர்ந்து பாஜகவையும், சீமானையும் சீண்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ட்வீட் செய்துள்ளார்.
5. ஏழு விருதுகளை தட்டிச் சென்ற 'சூரரைப் போற்று'
சூரரைப்போற்று திரைப்படம் 2021ஆம் ஆண்டுக்கான 7 சைமா விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகிய பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது.
6. தமிழ்நாட்டில் நான்கு நாள்களுக்கு கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (செப். 20) டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7. திருவாரூர் மாணவிக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க வாய்ப்பு - உதவுமா தமிழ்நாடு அரசு?
நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றும், நேபாளம் செல்ல பொருளாதார வசதியின்றி தவித்து வரும் கல்லூரி மாணவி குறித்த தொகுப்பு....
8. விரைவில் வலிமை டீசர்... வினோத்தை பாராட்டிய அஜித்!
வலிமை படத்தின் டீசர் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசரைப் பார்த்த நடிகர் அஜித், இயக்குநர் வினோத்தை மனதாரப் பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9. பிஇ, பிடெக் படிப்பு - 440 பொறியியல் கல்லூரி பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற 440 பொறியியல் கல்லூரிகள், பாடப்பிரிவு வாரியாக அனுமதிக்கப்பட்ட இடங்களின் விவரம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
10. கொடைக்கானலை உருவாக்க உதவிய வெள்ளக்கெவி மக்கள் - சாலை வசதி இல்லாமல் தவிப்பு
கொடைக்கானலை உருவாக்க உதவிய வெள்ளக்கெவி மக்கள் இன்றளவும் சாலை வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.