ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 pm - etv bharat

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 31, 2021, 5:01 PM IST

1. பெண்களுக்கென தனி நிதிநிலை அறிக்கை - வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

பெண்களுக்கென தனி நிதிநிலையறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் என கோவை தெற்கு தொகுதி உறுப்பினரான வானதி ஸ்ரீனிவாசன் பேரவையில் இன்று கோரிக்கை விடுத்தார்.

2. வருவாய் துறை சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறலாம் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்களை இணையதளம் வழியாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என அத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

3. தாயால் தாக்கப்பட்ட குழந்தை - வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த அமைச்சர்

பெற்ற குழந்தையை தாயே தாக்கிய சம்பவம் குறித்து அறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், பாதிக்கப்பட்டவர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.

4. அரும்பாக்கம் அருகே பற்றி எரிந்த கார்- நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பெண்

சென்னை அரும்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5. காவல் துறையினரை ஊக்குவிக்க சிறப்பு விருதுகள் - முதலமைச்சர் தகவல்

சென்னை: காவல் துறையினரை ஊக்குவிக்க அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

6. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சிவி சண்முகம் கைது!

அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விழுப்புரத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைதுசெய்யப்பட்டார்.

7. காட்டு யானைகளை விரட்டும் பணியில் கும்கி யானைகள்

நீலகிரியில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை, வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் நான்கு கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

8. இன்ஸ்டாகிராமில் ஜோதிகா - ஆரம்பமே அதகளம்

நடிகை ஜோதிகா, தற்போது முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இணைந்த முதல் நாளிலேயே 10,30,000 இணையவாசிகள் அவரை பின்தொடர்கின்றனர்.

9. விநாயகர் சதுர்த்திக்கு தடை - விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சாலை மறியல்

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10. சிறுமி பாலியல் வன்புணர்வு - தந்தை உள்ளிட்ட இருவர் போக்சோவில் கைது

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த தந்தையையும் அதற்கு உதவியாக இருந்த அவரது இரண்டாவது மனைவியையும் போக்சோவில் காவல் துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.