ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 5 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 4, 2021, 5:01 PM IST

1 குழந்தைகளை பாதிக்கும் ஃப்ரீபயர் விளையாட்டைத் தடை செய்க - ஆர்‌.பி. உதயகுமார்

குழந்தைகளை பாதிக்கும் ஃப்ரீபயர் உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்‌.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

2 TN Budget 2021:தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கலாகிறது; விவசாயத்திற்குத் தனி பட்ஜெட்

திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கலாகிறது என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

3 சிதம்பரத்தில் குடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

சிதம்பரத்தில் குடிநீர் குழாய்கள் புதைத்தது, குறைந்த அளவில் குடிநீர் இணைப்புகள் வழங்கி அதிக எண்ணிக்கையை காண்பித்தது எனப் பல்வேறு முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

4 போலீசை கண்டு பயந்து ஓடியவர் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

ராமநாதபுரத்தில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை போட்டியை தடுக்கச் சென்ற காவல் துறையினரைக் கண்டு பயந்து ஓடியவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

5 சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: பென்னிக்ஸ் தாயாரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு குறித்த விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், பென்னிக்ஸின் தாயாரிடம் சாட்சி விசாரணை நடைபெற்றது.

6 புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிறந்தநாள் - ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் 71 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும், பேனர் வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.

7 தாய்மார்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் தாய்மார்கள், தயக்கமோ அச்சமோ இல்லாமல் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.

8 உலக தாய்ப்பால் வார விழா - தமிழிசை பங்கேற்பு

ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

9 டெல்லி சிறுமியின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

டெல்லியில் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

10 மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?

பெற்றோர் மாதவிடாய் காலத்தில் தங்கள் பெண் பிள்ளைகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி மட்டுமல்லாமல் சுகாதாரம், உடற்பயிற்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக சரியான ஊட்டச்சத்து மிக்க உணவை அவர்களுக்கு வழங்குவது மாதவிடாய் காலத்தை இலகுவாக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.