ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM - etv bharat top 10 news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 5 PM
Top 10 news @ 5 PM
author img

By

Published : Jul 2, 2021, 5:10 PM IST

1. தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்?

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2. தியாகராஜ பாகவதரின் மகள்வழி பேரனுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர்!

தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரனுக்கு ஒதுக்கப்பட்ட, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்கான திறவுகோலை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 2) வழங்கினார்.

3. 'தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் குறித்து ஓபிஎஸ்ஸுக்குத் தெரியுமா?'

தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் குறித்து ஓ. பன்னீர்செல்வத்திற்குத் தெரியுமா என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

4. ஏடிஎம் கொள்ளை... கும்பல் தலைவனை குண்டுகட்டாகத் தூக்கிய காவல் படை: அந்த டிக்... டிக்... நிமிடங்கள்!

தமிழ்நாட்டில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது நான்காவது நபராக கொள்ளை கும்பலின் தலைவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

5. நீட் தேர்வு: நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி மனு!

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

6. மழைக் காரணமாக இடிந்து விழுந்த குளிர்பதன கிடங்கு சுவர்

பாலக்கோடு பகுதியில் பெய்த மழையால் அரசின் குளிர்பதன கிடங்கு சுவர் இடிந்து விழுந்தது.

7. கரோனா நிலவரம்: இந்தியாவில் 4 லட்சத்தைத் தாண்டிய உயிரிழப்பு

கடந்த 24 மணிநேரத்தில் 853 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

8. ஏடிஎம் கொள்ளை வழக்கு: நசீம் உசேனுக்கு 4 நாள் காவல்

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானாவில் மூன்றாவதாகக் கைதுசெய்யப்பட்ட நசீம் உசேனை நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. டெல்டா வகை வைரஸிலிருந்தும் பாதுகாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள்!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிகள் டெல்டா வகை வைரஸ்களிலிருந்தும் பாதுகாப்பை அளிக்கும் என அந்நிறுவனம் அடித்து கூறுகிறது.

10. டான்ஸ் ஆடத் தயாரா? - வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் லேட்டஸ்ட் பாடல்

'சிவகுமாரின் சபதம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.