ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : May 30, 2021, 5:09 PM IST

பிஎஸ்பிபி பள்ளி பாலியல் வழக்கு: கராத்தே மாஸ்டரை தூக்கிய போலீஸ்!

பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

4 அம்ச கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்திய பத்திரிகையாளர்கள்

ஈரோடு: பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

கீழ்வெண்மணி முதல் வாச்சாத்திவரை அடித்தட்டு மக்களின் பக்கம் நின்றவர் மைதிலி சிவராமன்!

கீழ்வெண்மணி தொடங்கி வாச்சாத்தி வரை அடித்தட்டு மக்கள், பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய மைதிலி சிவராமன் நேற்றிரவு காலமானார். அவரது பணிகள் என்றுமே மக்களுக்கானவையாக இருந்திருக்கிறது.

பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான அஞ்சலக ஊழியர்: ஏமாந்து தவிக்கும் மக்கள்

நாமக்கல்: மேல்சாத்தம்பூர் கிளை அஞ்சலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர், பண மோசடி செய்து தலைமறைவான நிலையில் அஞ்சலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வாழ்க்கை முழுவதும் போராடிய தலைவர் - மைதிலி சிவராமன் உயிரிழப்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் மைதிலி சிவராமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

GoBackStalin ட்விட்டரில் முதலமைச்சருக்கு எதிராகப் பரப்புரை!

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக ட்விட்டர்வாசிகள் GoBackStalin எனும் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இவ்வேளையில் முதலமைச்சருக்கு ஆதரவாகவும் WeStandWithStalin எனும் ஹேஷ்டேக் கொண்ட பதிவுகளை சமூக வலைத்தளவாசிகள் வேகமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

ரகசியமாக காதலியைக் கரம்பிடித்த இங்கிலாந்து பிரதமர்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தன் காதலி ஹேரி சைமண்ட்ஸை ரகசியத் திருமணம் செய்துகொண்டார். இது இவருக்கு 3ஆவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 2 நாள்களில் எங்கெங்கு மழை பெய்யும்?

வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜய்யின் 66ஆவது பட அப்டேட் வெளியீடு

தளபதி விஜய்யின் 66ஆவது திரைப்படத்தை, 'தோழா' பட இயக்குநர் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.