ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - latest news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 5 pm
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm
author img

By

Published : Mar 19, 2021, 5:03 PM IST

'நூறு ஆண்டுகள் ஆனாலும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது!'

பாமக வேட்பாளர் பழனிசாமியை ஆதரித்து மயிலாடுதுறையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, நூறு ஆண்டுகள் ஆனாலும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆக முடியாது எனத் தெரிவித்தார்.

ஸ்ரீரங்கத்தில் சசிகலா தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம்செய்தார்.

பழைய செல்லாத 1000 ரூபாய் நோட்டை காட்டி பரப்புரை செய்த உதயநிதி

பாலக்கோடு திமுக வேட்பாளர் பி.கே. முருகனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று காரிமங்கலம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

உங்களுக்கு நற்பணியாற்ற மீண்டும் வாய்ப்புத் தாருங்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

சாமி தரிசனம் செய்து தேர்தல் பரப்புரையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கினார்.

கே.சி. வீரமணி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கூடாது- சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

அமைச்சர் கே.சி. வீரமணி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று, புகார்தாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வட மாநிலங்களுக்குச் செல்லும் வாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு!

மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் ரயில் நிலையங்களிலிருந்து ராஜஸ்தான், மும்பை, குஜராத் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.

நிலக்கரி கொள்முதல் டெண்டருக்குத் தடை விதிக்க மீண்டும் மறுப்பு!

மின்வாரியத்துக்கு 1,330 கோடி ரூபாய் மதிப்பில் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்குத் தடைவிதிக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

வரதட்சணைக் கொடுமைசெய்த கணவன், மாமியார் கைது

25 சவரன் நகை கேட்டு துன்புறுத்தியதால் ஒரு வயது குழந்தையை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பெண்ணின் கணவனையும், மாமியாரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

'தினேஷ் கார்த்திக்கின் அந்த ஆட்டம் இந்தியாவின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்று'

2018ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஸ் கோப்பை டி20 தொடரில் வங்கதேச அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம், இந்தியாவின் சிறப்பான ஆட்டங்களில் ஒன்று என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் புகழ்ந்துள்ளார்.

அப்போ வாடகை கார்... இப்போ ஆட்டோ... மாஸ்காட்டும் தல அஜித்!

நடிகர் அஜித் ஆட்டோவில் பயணிக்கும் காணொலி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.