ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 pm - ETV Bharat

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்

Top 10 news @ 5 pm
Top 10 news @ 5 pm
author img

By

Published : Mar 8, 2021, 5:00 PM IST

தென் மாவட்டங்களில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்!

வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை திமுகவிடம் காங்கிரஸ் கொடுத்துள்ள நிலையில், தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி விரும்புவதாகத் தெரிகிறது.

நிரந்தர சின்னம் ஒதுக்கும் விவகாரம்! - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க வகை செய்யும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவுக்கான பிரிவுகளை எதிர்த்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மநீம கூட்டணி தொகுதிப்பங்கீடு! - இன்று மாலை அறிவிப்பு!

தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் கூட்டாக வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நிறவெறி சர்ச்சையில் இங்கிலாந்து அரச குடும்பம்-மேகன் மெர்கல் கண்ணீர் பேட்டி

இங்கிலாந்து அரச குடும்பத்தினர் குறித்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் அளித்துள்ள பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு: மாநில அரசுகளை கருத்து கேட்கும் உச்ச நீதிமன்றம்

இட ஒதுக்கீடு உச்சவரம்பு 50 விழுக்காட்டைத் தாண்டுவது தொடர்பாக மாநில, யூனியன் பிரதேச அரசுகளை உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

நான்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணி ஆட்சியர் தலைமையில் நேற்று(மார்ச்.7) நடைபெற்றது.

'ஆன்மீக தேசியவாதத்தை என்னுடைய ஒவ்வொரு ரத்த நாளங்களும் சுமக்கின்றன' - வசுந்தரா ராஜே

ஆன்மீகத்தையும், பாஜகவின் தேசியவாதத்தையும் என்னுடைய ஒவ்வொரு ரத்த நாளங்களும் சுமந்துச் செல்கின்றன என ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா கூறியுள்ளார்.

லத்தியை சுழற்றி வித்தை காட்டும் 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' பாட்டி!

புனேவில் உள்ள தெருக்களில் 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' வித்தையின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் சாந்தாபாய் பவார். 85 வயதிலும், 'லத்தி கத்தி' என்ற பழங்கால தற்காப்பு கலையை தெருக்களில் செய்து காண்பித்து வாழ்க்கையை நடத்திவரும் அவரை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கவுரவித்துள்ளார்.

திட்டமிட்ட தேதிக்கு முன்பே வெளியாகிறதா ’எம்ஜிஆர் மகன்’?

சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம், ஏப்ரல் 23ஆம் தேதிக்கு முன்பே வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்சிஜி மைதானத்தில் கிரிக்கெட் வீராங்கனையின் சிலை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்சிஜி) வீராங்கனையின் சிலையை நிறுவவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.