1. ரூ. 268.58 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல்!
கன்னியாகுமரி: குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, ரூ. 268.58 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடக்கி வைத்தார்.
2. தமிழக மீனவர்களின் படகுகள் அழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்- சீமான்
இலங்கை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகள், இலங்கை அரசால் அழிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
3. முதலமைச்சரை காண திரண்ட அதிமு தொண்டர்கள் - கரோனா பரவும் அபாயம்!
கன்னியாகுமரி செல்லும் வழியில் முதலமைச்சரை காண அதிமுக தொண்டர்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் அணியாமல் திரண்டதால் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளது.
4. வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க புதிய செயலி அறிமுகம்!
வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதற்கான இந்தியா மைக்ரேசன் என்னும் செயலியை ரீடு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
5. பிணைக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள அர்னாப்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
6. பாகிஸ்தான் அத்துமீறல்: இந்தியா பதிலடி!
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
7. பாதுகாப்புத் துறை செயலரை பணிநீக்கம் செய்த ட்ரம்ப்
தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்புத் துறை செயலர் மார்க் எஸ்பரை பணிநீக்கம் செய்துள்ளார்.
8. தங்கம் விலை சரிவு - சவரனுக்கு ரூ. 1,248க்கு குறைந்தது
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று (நவ. 10) ரூ. 1, 248 குறைந்துள்ளது.
9. அம்பானியை பின்னுக்கு தள்ளி இந்தாண்டு வள்ளல் பட்டத்தை தட்டிச் சென்ற விப்ரோ!
நடப்பு நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தோர் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி விப்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் ஆசிம் பிரேம்ஜி முதலிடத்தில் உள்ளார்.
10. ஐந்து வீரர்கள் சிறப்பாக ஆடிவிட்டால், மும்பைக்கு 5ஆவது கோப்பை உறுதி!
டெல்லி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால், மும்பை அணியின் ஐந்து வீரர்களின் ஆட்டம் மிகமுக்கியமானது.