ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - chennai district news

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

author img

By

Published : Jun 23, 2020, 5:00 PM IST

தந்தை, மகன் உயிரிழப்பு: ஒரு கோடி நிவாரணம் வழங்க கோரிக்கை!

தூத்துக்குடி: சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தந்தை, மகனின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு டிஜிபியிடம் புகாரளித்தனர்.

கரோனா: ரூ. 12 ஆயிரம் கோடியை ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்தும் பாமக!

சென்னை: கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு கோரியிருந்த ரூ. 12 ஆயிரம் கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அம்பேத்கர் சிலையை அகற்ற திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு!

சேலம் : மேம்பாலப் பணியை காரணம் காட்டி அம்பேத்கர் சிலையை அகற்றக்கூடாது என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.

ஹஜ் பயணம் ரத்து : சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு

டெல்லி : இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் கடற்படை தளம் அமைக்கும் ஈரான்

தெஹ்ரான்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் வரும் 2021ஆம் ஆண்டுக்குள் நிரந்தர கடற்படை தளத்தை அமைக்க ஈரான் ராணுவம் திட்டமிட்டுள்ளது.

ஆட்சியைக் கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த சிங்கப்பூர் அரசு முடிவு

சிங்கப்பூர் : கரோனா பெருந்தொற்றுக்கு இடையே, ஆட்சியைக் கலைத்து முன்கூட்டியே தேர்தல் நடத்த சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.

'மக்கள் மனதில் பீதியை கிளப்பவே ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்'

சென்னை: கரோனா தொற்று குறித்து மக்கள் மனதில் பீதியை கிளப்பவே ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்தார்.

'முக்கியக் குற்றவாளிகள் விடுதலை; சங்கரின் படுகொலைக்குப் பரிசளிப்பா?' - கிருஷ்ணசாமி

சென்னை: பட்டப்பகலில் நடத்தப்பட்ட சங்கரின் படுகொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றத்தின் பரிசளிப்பா என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

'அதிருப்தி அளிக்கிறது' - ட்ரம்ப்பின் விசா கட்டுப்பாடுகள் குறித்து சுந்தர் பிச்சை

வாஷிங்டன் : ஹெச் - 1பி விசா உட்பட பல்வேறு வகையான விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது அதிருப்தி அளிப்பதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட 'ஃப்ளிக்ஸ்டா' ஓடிடி டிஜிட்டல் தளம்

சென்னை: தமிழில் புதிதாக 'ஃப்ளிக்ஸ்டா' என்னும் ஓடிடி டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.