ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @4pm

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம்

Top 10 news @4pm
Top 10 news @4pm
author img

By

Published : May 13, 2020, 4:10 PM IST

என்எல்சி தீ விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு!

என்எல்சி பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

சொந்த ஊருக்கு செல்லும் கூடங்குளம் அணு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பணியாற்றிய வடமாநில ஒப்பந்தத் தொழிலாளர்கள், தூத்துக்குடி மாவட்டம், நெல்லை மாநகர் பகுதியைச் சேர்ந்த பிற தொழிலாளர்கள் என மொத்தம் 1,332 பேர் சிறப்பு ரயில்கள் மூலம் பாட்னாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராஜ்பவனில் கரோனாவா?

ராஜ்பவன் தீயணைப்பு நிலையத்தில், பணியாற்றும் தீயணைப்பு மீட்புத்துறை ஊழியர் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

'மகாராஷ்டிராவுக்கான ஜிஎஸ்டி பங்கை வழங்க வேண்டும்'

பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்புத் திட்டத்தை வரவேற்றுள்ள சிவசேனா, மகாராஷ்டிராவிற்கான சரக்கு மற்றும் சேவை வரி பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளது.

மாணவர்கள் தேர்வுக்கு முகக்கவசம் அணிந்து வர வேண்டும்

பொதுத்தேர்வு எழுத வருகைதரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா பரவாமல் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது

கரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 30 தீயணைப்பு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 30ஆக அதிகரித்துள்ளது.

மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டி?

அமெரிக்க அதிபர் பதவிக்குத் தான் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று ஜனநாயக கட்சியின் பெர்னி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

நாய் கடித்து உயிருக்கு ஊசலாடிய நாகப்பாம்பு

நாய் கடித்ததில் படுகாயமடைந்த நாகப்பாம்புவுக்கு இரவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதனைக் காப்பாற்றியுள்ளார் வனத் துறை மருத்துவர் அசோகன்.

சிங்கிள் மோடில் இருந்து கமிட் மோடுக்கு மாறிய 'பல்வாள்தேவன்'!

நடிகர் ராணா தன் காதலி திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக அறிவித்ததால் தெலுங்கு சினிமா மகிழ்ச்சியடைந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.