50 விழுக்காடு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உத்தரவு நீட்டிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்
மதுரவாயல் - வாலாஜா நெடுஞ்சாலைக்கு இடையே சாலைகளை சரியாகப் பராமரிக்காத இரண்டு சுங்கச்சாவடிகளில், 50 விழுக்காடு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பொங்கல் பண்டிகை வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜனவரி 9ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
சி.நாராயணசாமி நாயுடு பெயரில் விருது வழங்கி கௌரவிக்கும் அரசு
சென்னை: சி.நாராயணசாமி நாயுடு நமது விவசாயிகளுக்கு, ஆற்றிய சிறந்த சேவையை போற்றிப் பாராட்டும் வகையில், குடியரசு தினவிழாவில், இந்த ஆண்டு முதல் ' சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது ' என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சாத்தான்குளம் விவகாரம்: குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணை
மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரிடமும் பாதுகாப்பு காரணங்களுக்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று (டிச. 21) விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது - சுகாதாரத் துறை அமைச்சர்
கோழிக்கோட்டில் பரவத் தொடங்கியுள்ள ஷிகெல்லா என்னும் பாக்டீரியா தொற்று நோய் கட்டுக்குள் உள்ளதாக, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
பிணை வழங்கியும் வெளியே விடாமல் இழுத்தடித்த சிறைக் கண்காணிப்பாளர்!
லக்னோ: சிறை கண்காணிப்பாளரின் சிறிய தவறால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் பிணை கிடைத்தும் எட்டு மாதங்களாக சிறைவாசம் அனுபவித்துள்ளார்.
உறையும் பனி : ஸ்கேட்டிங் விளையாட்டுத் திடலாக மாறும் லடாக்!
லே : லடாக்கில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகச் சென்ற நிலையில், ஐஸ் ஹாக்கி, ஐஸ் ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சியில் தடகள வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மோசமான காலத்தை கடந்துவிட்டோம்... எச்சரிக்கை உணர்வு மட்டும் அவசியம் - ஹர்ஷ் வர்தன்
நாட்டில் கோவிட்-19 பாதிப்பின் மோசமான காலத்தை தாண்டிவிட்டதாகத் தெரிவித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மக்களிடம் எச்சரிக்கை உணர்வு மட்டும் அவசியம் என்றுள்ளார்.
பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட 330 நைஜீரியா மாணவர்கள் விடுவிப்பு
போக்கோ ஹராம் அமைப்பால் கடத்தப்பட்ட 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டனர்.
அய்யப்பனாக பவன் கல்யாண், கோஷியாக ராணா!
’அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில், பிரித்வி ராஜ் நடித்த கோஷி குரியன் கதாபாத்திரத்தில் ராணா நடிக்கவிருப்பதை அப்படக்குழு உறுதி செய்துள்ளது.