ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

author img

By

Published : Oct 12, 2021, 3:10 PM IST

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்...

TOP 10 NEWS @ 3 PM
TOP 10 NEWS @ 3 PM

1. வாக்கு எண்ணிக்கை: நண்பகல் 1 மணி முன்னிலை நிலவரம்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

2. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

3. 'நிலக்கரி தட்டுப்பாடு... தமிழ்நாட்டில் அவசர காலத் திட்டம் அவசியம்'

தென் மாநிலங்களில் தமிழ்நாடு, வட மாநிலங்களில் மிகக் குறைந்த அளவே நிலக்கரி இருப்பு உள்ளதால், இன்னும் ஒரு சில நாள்களில் முழுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, கள நிலைமையை உணர்ந்துகொண்டு, மின்பற்றாக்குறை ஏற்பட்டால் அதைச் சமாளிப்பதற்கான அவசர காலத் திட்டத்தைத் தயாரித்து தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

4. கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான 250 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மீட்கப்பட்டது.

6. மாவோயிஸ்ட் பயங்கரவாத பயிற்சி: 6 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத பயிற்சி அளித்த வழக்கில் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் 12 இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

7. கொள்ளை வழக்கில் ஒருவர் என்கவுன்ட்டர் - காவல் துறை விளக்கம்

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி கொள்ளை சம்பந்தமாக குற்றவாளி ஒருவரை என்கவுன்ட்டர் செய்த விவகாரம் குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

8. மெரினாவில் தொடரும் சோகம்: இறப்பைத் தடுப்பதற்குப் புதிய அவசர உதவி மையம்!

மெரினா கடற்கரையில் குளிக்க வருபவர்கள் அலையில் சிக்கி மரணம் அடைவதைத் தடுக்கும் வகையில் புதிய அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

9. புதிதாக 14,313 பேருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 313 பேர் கரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10. பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் டெல்லியில் சிறப்புப் பிரிவு காவலர்களால் இன்று (அக். 12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.