ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 3 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்...

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 22, 2021, 3:15 PM IST

  1. 'ஒருபுறம் மகிழ்ச்சி,மறுபுறம் வருத்தம்...' - இல. கணேசன்

'ஒரே நாடு ஒரே தேசம்' என்ற அடிப்படையில் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இருந்தாலும், கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவது வருத்தம் அளிக்கிறது என இல.கணேசன் தெரிவித்தார்.

2. ஈரானில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீட்பு

ஈரானில் இருந்து ஆறு தமிழ்நாடு மீனவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

3. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைப்பு!

சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.

4. குறைந்தது பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று (ஆக.22) பெட்ரோல் 15 காசுகள் குறைந்து 99 ரூபாய் 32 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து 93 ரூபாய் 66 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

5. EXCLUSIVE: முதுகலை பட்டப்படிப்பு: நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

முதுகலை பட்டப்படிப்பில் சேர நாளை முதல் செப்டம்பர் ஒன்றாம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ண சந்திரன் அறிவித்துள்ளார்

6. 'வந்தாரை வாழவைக்கும் சென்னை'- முதலமைச்சர் வாழ்த்து

382 ஆவது சென்னை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.

7. தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (ஆக.22) திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8. ’நகைக்கு பாலிஷ்...’ மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு!

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அருகே பழைய நகைக்கு பாலிஷ் செய்து தருவதாகக் கூறி மூதாட்டியிடமிருந்து அடையாளம் தெரியாத நபர்கள் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

9. கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் கைது!

கரோனா விதிமுறைகள் பின்பற்றாதது குறித்துக் கேட்ட நபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

10. மதுரையில் 3500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள்

மதுரை உசிலம்பட்டி அருகே சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்களை ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.