ETV Bharat / state

3 மணி செய்தி சுருக்கம் top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-3-pm
top-10-news-at-3-pm
author img

By

Published : Jul 30, 2021, 3:09 PM IST

1.தன்பாத் நீதிபதி கொலை- உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

தன்பாத் நீதிபதி ஆட்டோ மோதி உயிரிழந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையில் இறங்கியுள்ளது.

2.பெகாசஸ் விவகாரம்- அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பாக மூத்தப் பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

3.பெகாசஸ் வேவு பார்த்தது உண்மை- பிரான்ஸ்!

பெகாசஸ் மென்பொருள் வாயிலாக உளவு பார்க்கப்பட்ட விவகாரம் உண்மைதான் என பிரான்ஸ் அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

4.போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது குறைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்

போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கமளித்துள்ளார்.

5.கணவனை கொன்ற மனைவி - குடும்ப தகராறு காரணமாக வெறிச்செயல்

காஞ்சிபுரத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

6.கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி - சிசிடிவி காட்சி வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சி

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற நீலகண்ட பிள்ளையார் கோயில் உண்டியல் பணத்தை பூசாரி ஒருவர் பதுக்கி வைக்கும் காட்சிகள் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

7.நவரசா அனுபவத்தை பகிரும் கார்த்திக் நரேன்!

'நவரசா' திரைப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமியுடன் பணியாற்றியது மறக்க முடியாத வாழ்நாள் அனுபவம் என இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

8.நவரசா படத்தின் 'துணிந்த பின்' பகுதி மறக்கமுடியாத அனுபவம்: இயக்குநர் சர்ஜுன்

'நவரசா' ஆந்தாலஜி படத்தின் 'துணிந்த பின்' பகுதியை இயக்கியது சிறந்ததொரு அனுபவம் என இயக்குநர் சர்ஜுன் தெரிவித்தார்.

9.யுஷ்வேந்திர சஹால், கௌதமுக்கு கரோனா பாதிப்பு!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திர சஹால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

10.இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா!

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.