ETV Bharat / state

3 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 3 PM - ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-3-pm
top-10-news-at-3-pm
author img

By

Published : Jul 29, 2021, 2:56 PM IST

1.பெகாசஸ் விவகாரம்: மம்தா பானர்ஜிக்கு சிவசேனா பாராட்டு!

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்திய மம்தா பானர்ஜிக்கு சிவசேனா பாராட்டு தெரிவித்துள்ளது.

2.சுதந்திர தின நினைவு தூண்: டெண்டர் அறிவிப்பு வெளியீடு

மெரினாவில் சுதந்திர தின நினைவு தூண் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித் துறை இன்று (ஜூலை 29) டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3.சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது - இளைய தலைமுறைக்கு உத்வேகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவித்திருப்பது இளைய தலைமுறையினர் அர்ப்பணிப்புடன் சமூகத்திற்கு பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4.கட்டண மீட்டரை மாற்றினால் நடவடிக்கை: உயர் நீதிமன்ற மதுரை கிளை

ஆட்டோ, கார்களில் கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றினாலோ, அதிக பயணிகளை ஏற்றினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

5.ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்?

ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

6.பெண்களுக்கு கடனுதவி: தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை

சிறுபான்மை நலத்துறை வாயிலாக சிறுபான்மை பெண்கள், இஸ்லாமிய பெண்களுக்கு கடனுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நேற்று (ஜூலை 28) கூறினார்.

7.அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8.மலை பாதையில் ராட்சத பாறை சரிந்து விபத்து

சேலம் அருகே மலை பாதையில் நேற்று (ஜூலை 28) ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

9.பவர் பேங்க் செயலி மோசடி - தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் கைது

பவர் பேங்க் செயலி மூலம் 300 கோடி ரூபாய் மோசடி வழக்கில் தொடர்புடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவரை உத்தரகாண்ட் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.

10.'சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது' - சார்பட்டா குறித்து சூர்யா

நடிகர் சூர்யா, 'சார்பட்டா பரம்பரை' படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.