ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm - latest news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 3 pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 pm
author img

By

Published : Mar 23, 2021, 3:02 PM IST

ஆமா.. அந்த ரூ.15 லட்சம் கிடைத்ததா? மம்தா பானர்ஜி

பாஜக மக்களுக்கு தவறான வாக்குறுதிகளை அளிக்கிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். மேலும், அந்த ரூ.15 லட்சம் கிடைத்ததா? என்றும் அவர் வாக்காளர்களிடம் கேள்வியெழுப்பினார்.

’சரித்திரம் திரும்பி பார்க்கும் நாளாக மாற்றுங்கள்’ - கமல் பேச்சு!

திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட கமல், “ஏப்ரல் ஆறாம் தேதியை சரித்திரம் திரும்பி பார்க்கும் நாளாக மக்கள் மாற்ற வேண்டும்” என கூறினார்.

கரூர் சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் மட்டும் 77 பேர் போட்டியிடுகின்றனர்.

நீட் தேர்வு எழுத கூடுதல் மையங்கள் அமைத்து அடுத்தாண்டு முதல் செயல்படுத்த உத்தரவு

மாணவர்கள் தங்கள் மாநிலங்களிலேயே நீட் தேர்வு எழுதும் வகையில் கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும். இதனை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த தேசிய தேர்வுகள் வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’சிறப்பாகக் களப்பணியாற்றி வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும்’ - அதிமுக மாவட்டச் செயலர் கட்சியினருக்கு கோரிக்கை

அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதாகவும், அவர்களின் வாக்குகள் அனைத்தையும் சரியாக அறுவடை செய்ய வேண்டும் என்றும் அதிமுக மாவட்டச் செயலர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பரப்புரையில் சிறுவர்களை ஈடுப்படுத்திய எஸ்டிபிஐ கட்சி மீது வழக்கு!

ஆம்பூரில், தேர்தல் விதிமுறைகளை மீறி சிறுவர்களை பரப்புரையில் ஈடுபடுத்திய எஸ்டிபிஐ கட்சியினர்மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

’போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டுத் தற்கொலை’ - காவல் துறையினர் விசாரணை

மயிலாப்பூரில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், வேலைப்பளு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

’இரு சமூகத்தினரிடையே பாதை தொடர்பாக பிரச்னை’ - சார் ஆட்சியர் வளாகத்தில் சமையல் செய்து போராட்டம்

காடை இடையாத்தூர் கிராமத்தில் பாதை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, அறந்தாங்கி சார் ஆட்சியர் வளாகத்தில் சமையல் செய்து நூதன முறையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

’விஜய் அளவிற்கு யாரும் என்னை மரியாதையாக நடத்தவில்லை’ - கண் கலங்கிய கங்கனா ரனாவத்

தான் நடித்த திரைப்படங்களின் இயக்குநர்கள் எவரும் தலைவி படத்தின் இயக்குநர் விஜய் அளவிற்கு மரியாதையாக தன்னை நடத்தியதில்லை எனக்கூறி தலைவி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கண் கலங்கினார்.

அசுரனுக்கு தேசிய விருது - வெற்றிமாறனை வாழ்த்திய தயாரிப்பாளர் தாணு

இயக்குநர் பாலுமகேந்திரா இயக்கிய வண்ண வண்ண பூக்கள் படத்துக்குப் பிறகு அவரது சீடர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்துக்காக எனது நிறுவனம் தயாரித்த படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பது பெருமையாக இருப்பதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.