ETV Bharat / state

3 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்...

top-10-news-at-3-pm
top-10-news-at-3-pm
author img

By

Published : Feb 15, 2021, 3:14 PM IST

1.ஜெ. பிறந்தநாள்: 123 சர்வ சமய இணையருக்கு சீர்வரிசையுடன் திருமணம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 123 இணையருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் திருமணம் நடத்திவைத்தனர்.

2.15ஆவது நிதி ஆணையம்: தென்மாநிலங்களுக்கு வரிப் பொதுச்சேர்மத்தில் கிடைக்கும் 16%

தேசத்தில் 28 மாநிலங்களுக்கென்று ஒட்டுமொத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும் வரிப் பொதுச் சேர்மத்திலிருந்து (Common Tax Pool) ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகிய ஐந்து தென்மாநிலங்களுக்கு மொத்தம் 16 விழுக்காட்டுப் பங்கு கிடைக்கிறது.

3.மக்களுக்கு கொடூர பரிசளிக்கும் மோடி அரசு - ஸ்டாலின்

பெட்ரோல் டீசலைத் தொடர்ந்து சமையல் கேஸ் விலையும் கடுமையாக உயர்த்தி மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொடூர பரிசளித்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

4.அழியும் நிலையில் உள்ள தாவரங்கள்: மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு!

தமிழ்நாட்டில் அழியக்கூடிய தாவரங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு தாவரங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

5.டூல்கிட் விவகாரம்: மேலும் இருவருக்கு பிடிவாரண்ட்!

டூல்கிட் விவகாரம் தொடர் சர்ச்சையை கிளப்பிவரும் நிலையில், மேலும் இரண்டு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6.இனி தேர்தல் பணியாளர்களும் முன்களப்பணியாளர்கள்! - ராதாகிருஷ்ணன்

தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களையும் கரோனா தடுப்பூசிக்கான முன்களப்பணியாளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

7.'நிலாவில் நிலம்... வானில் நட்சத்திரம்' நிஜத்திற்கு அப்பாற்பட்டதை பரிசாக வழங்கிய காதலன்!

நிலாவில் காதலிக்காக ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கியது மட்டுமின்றி, நட்சத்திரத்தை வாங்கி அதற்குக் காதலியின் பெயரை காதலர் சூட்டியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

8.பைசர் தடுப்பூசிக்கு ஜப்பான் ஒப்புதல்

பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பயன்படுத்த ஜப்பான் நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

9.பாண்டிராஜ் - சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று (பிப்.15) பூஜையுடன் தொடங்கியது.

10.ஆஸ்திரேலியன் ஓபன்: ஃபோக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய நடால்!

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றியர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு உலகின் முன்னணி வீரரான ரஃபேல் நடால் முன்னேறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.