ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - ஒலிம்பிக் பதக்கத்தை இழக்குமா ஆஸ்திரேலியா

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3 pm
Top 10 news @ 3 pm
author img

By

Published : Nov 10, 2020, 3:18 PM IST

1. நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைதுசெய்து காங்கேசன்துறைக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2.குஜராத் இடைத்தேர்தல்:அனைத்து தொகுதிகளிலும் பாஜக தொடர் முன்னிலை

குஜராத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக தொடர் முன்னிலையில் இருந்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, 'இது குஜராத்தில், இனி நடைபெறயிருக்கும் தேர்தலுக்கான ஒரு ட்ரெய்லர்' எனப்புகழ்ந்தார்.

3.விஜய் மக்கள் நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

சென்னை பனையூர் பகுதியில் உள்ள நடிகர் விஜய் இல்லத்தில் 30 மாவட்டச் செயலாலர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் ரீதியாக செய்த சில நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தற்போது விஜய் ஆலோசனை நடத்தி வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

4. 'அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் ஸ்டாலின்!'

அமைச்சர் துரைக்கண்ணுவின் இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மீது சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

5. விதியை மீறி வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்களின் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்பட்டிருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

6. மக்கள் பார்வைக்காக மீண்டும் திறந்து விடப்பட்ட காந்தி மியூசியம்!

மதுரையின் சுற்றுலா தளங்களுள் ஒன்றான புகழ்பெற்ற காந்தி மியூசியம் மக்கள் பார்வைக்காக இன்று மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.

7. அர்னாப் கோஸ்வாமியை சிறை அலுவலர்களின் அனுமதிப்பெற்று சந்திக்கலாம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை சிறை அலுவலர்களின் அனுமதிப்பெற்று தொடர்பு கொள்ளலாம் என்று மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்தார்.

8. 900 கிராம் நகைகளை உடலில் சுற்றி கொள்ளையடித்த நபர்கள்

சென்னையில் உள்ள நகைப்பட்டறையில் இருந்து 112 தங்க சவரன் நகைகளை திருடி உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு தப்பி ஓடிய ஊழியர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

9. பைடனின் கரோனா டாஸ்க் ஃபோர்ஸில் இடம்பிடித்த இரண்டு இந்தியர்கள்!

அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் ஆரம்பிக்கவுள்ள கரோனா டாஸ்க் ஃபோர்ஸில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு அமெரிக்கா மருத்துவர்கள் இடம் பிடித்துள்ளனர்

10. ஒலிம்பிக் பதக்கத்தை இழக்குமா ஆஸ்திரேலியா ?

2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளதையடுத்து, அந்நாடு தனது வெண்கல பதக்கத்தை இழக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.