ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm - 3 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3 pm
Top 10 news @ 3 pm
author img

By

Published : Sep 23, 2020, 3:17 PM IST

  • கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரின் உதவியாளர் கடத்தல்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி பதிவுகள்!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணனை பட்டபகலில் அடையாளம் தெரியாத 4 நபர்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்குள் புகுந்து கடத்திச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான கண்காணிப்புப் படக்கருவின் காட்சிகள் தற்போது வெளியாகி திகிலூட்டி வருகிறது.

  • கரோனா தடுப்புமருந்து:முக்கிய ஒப்பந்தத்தில் பாரத் பயோடெக் கையெழுத்து!

ஹைதராபாத்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகம் உருவாக்கிவரும் கோவிட்-19 தடுப்புமருந்தை சர்வதேச அளவில் விநியோகிக்க பாரத் பயோடெக் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

  • மாணவர்கள் சேர்க்கை: புதிய பள்ளிகளை தொடங்குவது குறித்து செப். 28இல் ஆய்வு

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரம், புதியதாக மழலையர், தொடக்கப் பள்ளிகள் உள்ளிடவற்றை தொடங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் செப்டம்பர் 28ஆம் தேதி ஆய்வு செய்கிறார்.

  • அண்ணா பல்கலைக்கழக பெயரை மாற்ற எதிர்த்து ஆளுநருக்கு கடிதம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

  • இந்தியாவில் 12 லட்சத்தை கடக்கும் தினசரி கரோனா பரிசோதனை!

டெல்லி: நாட்டில் ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • 'நான் கடும் கோபத்தில் இருக்கிறேன்' - அனுராகிற்கு ஆதரவு தெரிவித்த ஹியூமா குரேஷி

மும்பை: இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக ஹியூமா குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.

  • குமரியில் ஊரடங்கு விதிமீறல்... பாஜகவைச் சேர்ந்த 970 பேர் மீது வழக்குப்பதிவு!

கன்னியாகுமரி: பாஜக மாநிலத் தலைவர் முருகன் வந்த சமயத்தில், 144 தடை உத்தரவை மீறி ஊர்வலம் சென்ற குற்றத்திற்காக 970 பாஜகவினர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • 'செட்டில் ஆனால் சிக்கல்தான்' ராஜஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் குறித்து பயிற்சியாளர் கருத்து

ஹைதராபாத்: 18 வயதான இடதுகை ஆட்டக்காரரான ஷஸ்வி ஜெய்ஸ்வால் களத்தில் செட்டில் ஆகிவிட்டால், அவரை கட்டுப்படுத்துவது கடினம் என்று அவருக்கு சிறிய வயதில் பயிற்சி அளித்த ஜ்வாலா சிங் தெரிவித்துள்ளார்.

  • ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் ரூ. 5,550 கோடியை முதலீடு செய்யும் கேகேஆர்!

டெல்லி: அமெரிக்காவின் பிரபல முதலீட்டு நிறுவனமான கேகேஆர் நிறுவனம், முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் ரூ. 5,550 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

  • உலகளவில் 9 லட்சத்து 75 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழப்பு!

உலகளவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 75 ஆயிரத்து 541 ஆக அதிகரித்துள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.