ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm - ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm

Top 10 news @1pm
ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm
author img

By

Published : Mar 3, 2021, 12:53 PM IST

Updated : Mar 3, 2021, 12:59 PM IST

டெல்லி உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஆம் ஆத்மி அமோக வெற்றி, அனைத்து இடங்களிலும் பாஜக படுதோல்வி!

டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி நான்கு இடங்களை கைப்பற்றிய நிலையில் பாஜக அனைத்து இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

மரண தண்டனை கைதி ஷப்னம் பரேலி சிறைக்கு மாற்றம்!

காதலை ஏற்க மறுத்த குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷப்னம், கைதிகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து பரேலி சிறைக்கு மாற்றப்பட்டார்.

அரசு ஊழியர்களுக்கு தனி வாக்குச்சாவடி: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், சம்பந்தப்பட்ட தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்க ஏதுவாக, தனி வாக்குச்சாவடிகளை அறிவிக்கக் கோரிய வழக்கில் மார்ச் 8ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் மாப்பிள்ளை அழைப்பு!

சேலத்தைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவருக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த பிரஷிதா என்பவருக்கும் நாமக்கல்லில் இன்று (மார்ச்3) திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான மாப்பிள்ளை அழைப்பு நேற்று (மார்ச் 02) மாட்டு வண்டியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கண்களை கட்டிக்கொண்டு உரி அடித்தல் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றன.

பிரதமர் படம் இருந்த பேனர் கிழிப்பு- இரவோடு இரவாக புதிய பேனர் வைத்த காவலர்கள்!

பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றிருந்த பெயர்ப் பலகை, பதாகைகள் கிழிக்கப்பட்டதால், பாஜகவினர் கடும் கொந்தளிப்புக்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாகப் பிரதமர் மோடி படத்துடன் மீண்டும் புதிய பேனர் தயார் செய்து காவல் துறையினர் அதே இடத்தில் வைத்துள்ளனர்.

மதுரை-தேனி ரயில் பாதையில் இன்று ஆய்வு

மதுரையிலிருந்து தேனி வரை தற்போது போடப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்படவிருக்கிறது.

ரயில்வே வார விழா கொண்டாட்டம்!

ரயில்வேத் துறையின் 65ஆவது வார விழா கொண்டாட்டம் தென்னக ரயில்வே சென்னை கோட்டத்தில் நடைபெற்றது.

வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை!

முன்விரோதம் காரணமாக இளைஞரின் தலையை துண்டித்து அம்மன் கோயில் வாசலில் வைத்து சென்ற கொலையாளிகளால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

ரைபிள் கிளப்பில் பயிற்சி: மீண்டும் சமூகவலைதளத்தில் வைரலாகும் 'வலிமை' அஜித்!

நடிகர் அஜித் ஆவடி ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Last Updated : Mar 3, 2021, 12:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.