ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - top 10 news etv bharat tamilட

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm
author img

By

Published : Jun 24, 2020, 1:04 PM IST

மேற்கு வங்கத்தில் கரோனா பாதித்த எம்எல்ஏ உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ தமோனாஷ் கோஷ் இன்று உயிரிழந்தார்.

நக்சலைட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்: சத்தீஸ்கர் காவலர் படுகாயம்!

ராய்ப்பூர்: நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், சத்தீஸ்கர் ஆயுதப் படை காவலர் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

ஊரடங்கு மீறல்: ரூ.15 லட்சத்தை நெருங்கிய அபராதம்

சென்னை: அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவை மீறியதாக சென்னையில் தற்போதுவரை ஏழு லட்சத்து 14 ஆயிரத்து 850 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 14 கோடியே 95 லட்சத்து 23 ஆயிரத்து 610 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

18 நாள்கள் தொடர் உயர்வு: பெட்ரோலை ஓவர்-டேக் செய்த டீசல்!

டெல்லி: நாட்டில் முதல்முறையாக பெட்ரோல் விலையைவிட டீசல் விலை அதிகரித்து விற்பனையாகியுள்ளது.

இந்தியாதான் எங்கள் நெருங்கிய நட்பு நாடு - வங்க தேசம்

டாக்கா: இந்தியாதான் வங்க தேசத்தின் மிக நெருக்கமான நட்பு நாடு என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமென் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் ரூ.1.32 கோடி போதைப்பொருள்கள் சிக்கின!

காந்திநகர்: குஜராத்தில் ரூ.1.32 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் சிக்கின.

குஜராத்தில் வங்கி பெண் ஊழியர் மீது காவலர் தாக்குதல்: காணொலி வைரல்!

சூரத்: குஜராத்தில் வங்கிக்குள் நுழைந்த காவலர் பெண் ஊழியரை தாக்கிய காணொலி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய-சீன மோதலை தணிப்பதற்கு ரஷ்யாவின் பங்கு முக்கியம்!

டெல்லி: 'இந்தியாவுடன் போர்த்திறன் கூட்டுறவில் இருப்பதால் இந்தியா பின்னடைவதை ரஷ்யா விரும்பாது, அதே நேரம் உலகின் சக்திவாய்ந்த ஒரே நாடாக சீனா இருப்பதையும் ரஷ்யா விரும்பவில்லை' என்று பாதுகாப்புத் துறை வல்லுநர் க்வாமர் அகா தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம்: ஆம் ஆத்மி கவுன்சிலர் வீட்டில் ரெய்டு!

டெல்லி: டெல்லி கலவரம் தொடர்பாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் வீட்டில் அமலாக்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

'இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' - சனம் ஷெட்டி

சீன பொருள்களைத் தவிர்த்து இந்திய நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.