ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM

author img

By

Published : Jun 3, 2020, 1:05 PM IST

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @1PM
Top 10 news @1PM

பறிபோன இரு உயிர்கள் - கர்ப்பிணி யானைக்கு அன்னாச்சி பழத்தில் வெடியை வைத்து வழங்கிய மிருகங்கள்

திருவனந்தபுரம்: அன்னாச்சி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானையை கொன்ற ஈவு-இரக்கமற்றவர்கள் மனிதன் மோசமான மிருகம் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை

டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நிசார்கா புயல் எதிரொலி: 15 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

மும்பை: நிசார்கா புயல் இன்று கரையைக் கடக்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஷ்டிராவின் இரண்டு மாவட்டங்களிலிருந்து 15 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சலூன், ஸ்பா கடைகளுக்குச் செல்வோர் கட்டாயம் ஆதார் வைத்திருக்க வேண்டும்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சலூன் கடைகள், அழகு நிலையம், ஸ்பா நிலையத்திற்குச் செல்வோர் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டுசெல்ல வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

வாத்தை கவ்விச் சென்ற சிறுத்தை - சிசிடிவி காட்சி

நீலகிரி: குன்னூர் நகர்ப்பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று வாத்து ஒன்றை கவ்விச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதியின் சாதனை சுவடுகள் என்றும் மறையாது - இயக்குநர் சுசீந்திரன்

சென்னை: கருணாநிதியின் பிறந்தநாளுக்கு தான் எழுதிய வாழ்த்து மடலில், தமிழுக்கும் தமிழர்களுக்கும் நீங்கள் செய்த நற்தொண்டுகளை என்றும் நினைவில் கொள்வோம் என இயக்குநர் சுசீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கேல் ரத்னா விருதுக்கு மணிக்கா பத்ரா பெயர் பரிந்துரை

இந்தியாவின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ராவின் பெயர், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜூலையிலிருந்து வழக்குகளை நேரில் விசாரிக்க வழக்குரைஞர்கள் கோரிக்கை!

டெல்லி: நீதிமன்றங்களில் வழக்குகளை நேரில் விசாரிக்க ஜூலை மாதத்திலிருந்து அனுமதி அளிக்கக்கோரி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவிற்கு கடிதம் எழுதியுள்ளது.

நீதிவேண்டி காலில் விழுந்து பட்டியலின தம்பதி: அநீதி இழைத்த அலுவலர் பணி இடைநீக்கம்!

அமராவதி: பட்டியலின மக்களுக்கு அநீதி இழைத்த கிராம வருவாய் அலுவலரை அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்துள்ளார்.

விண்ணிலிருந்து உரையாடிய விண்வெளி வீரர்கள்!

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்கள், விண்வெளி நிலையத்திலிருந்து பேசினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.