ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1 pm - சிதாரா

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்

1 pm
1 pm
author img

By

Published : Sep 11, 2020, 1:32 PM IST

ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை: வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'மே மாதமே இந்தியாவில் 64 லட்சம் பேருக்கு கரோனா' - அதிர்ச்சியளிக்கும் ஐஎம்சிஆர் முடிவுகள்

டெல்லி: இந்தியாவில் கடந்த மே மாதமே 64 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

தொடரும் தண்ணீர் லாரிகளின் அட்டூழியம் - 4 வயது சிறுவன் மூளை சிதறிச் சாவு!

சென்னை: பட்டினப்பாக்கம் போக்குவரத்து சமிக்ஞை விளக்கின் அருகே தண்ணீர் லாரி மோதியதில் 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

வெடிகுண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு மரண பயம்!

ஜெய்ப்பூர்: என்னையும் தனது குடும்பத்தினரையும் பழிவாங்க பயங்கரவாத குழுக்கள் திட்டம் தீட்டிவருவதாக நீதிபதி அஜய் குமார் மிஸ்ரா காவல் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இரண்டு முக்கிய மைல் கற்கள் - நினைவுகூரும் பிரதமர்

டெல்லி : சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையை யாராலும் எளிதில் மறக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

யூ.எஸ். ஓபன்: இறுதிச்சுற்றில் நவோமி ஒசாகா!

நியூயார்க்: யூ.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

யூ.எஸ். ஓபன்: செரீனாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய அஸரென்கா!

யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து, பட்டம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

நாசியில் ஸ்ப்ரே மூலம் செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்து - சீனா ஒப்புதல்!

பெய்ஜிங்: நாசியில் ஸ்ப்ரே மூலம் செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்தின் முதல்கட்ட மருத்துவ சோதனைக்கு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.

கரோனா தடுப்பு மருந்து சோதனை நிறுத்தும்: உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

ஜெனீவா: கரோனா தடுப்பு மருந்து சோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது, தடுப்பு மருந்து சோதனையில் எது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை எடுத்துரைக்கும் வகையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

'நான் வசிக்கும் வீடு சரத் பவாருக்குச் சொந்தமானது' - கங்கனா ரணாவத்

மும்பை: தான் வசிக்கும் கட்டடம் சரத் பவாருக்குச் சொந்தமானது என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.