ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 11 am - ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்...

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்

author img

By

Published : Jul 3, 2021, 10:42 AM IST

1. 16 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

மதுரை உள்பட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. தசை சிதைவால் பாதிக்கப்பட்ட மகனை காப்பாற்ற தாய் முதலமைச்சரிடம் கோரிக்கை!

துச்சேன் தசை சிதைவு (Duchenne muscular dystrophy -DMD) என்ற கொடுமையான நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை காப்பாற்ற அவனது தாய் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

3. நண்பரின் காதை கடித்து துப்பியவர் கைது!

மயிலாடுதுறை அருகே டைல்ஸ் வேலை செய்பவர்களிடையே ஏற்பட்ட தகராறில் நண்பரின் காதை கடித்து துப்பியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

4. கேரள பாஜக மீதான ஹவாலா வழக்கு: மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனுக்கு நோட்டீஸ்!

கேரளாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ள ஹவாலா வழக்கு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனுக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

5. இணையதள விளையாட்டிற்கு அடிமையான இளைஞர்கள்: டிஜிபி சைலேந்திர பாபு அறிவுரை!

தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு, இணையதள விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களுக்கு அறிவுரை வழக்கும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

6. முதலமைச்சர் இரவோடு இரவாக ராஜினாமா- இன்று எம்எல்ஏக்கள் கூட்டம்!

உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் வெள்ளிக்கிழமை (ஜூலை 2) இரவோடு இரவாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் இன்று ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் டேராடூனில் நடைபெறுகிறது.

7. ஒன்றிய அரசின் காயகல்ப விருதை வென்ற இராமநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்!

இராமநாதபுரம்: கமுதி அருகே உள்ள மேலராமநதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒன்றிய அரசின் காய கல்ப விருது வழங்கப்பட்டுள்ளது.

8. ஒன்றியம் என்பதில் என்ன பிழை? - ட்விட்டரில் கேள்வி எழுப்பிய வைரமுத்து!

மத்திய அரசை ஒன்றிய அரசு என பயன்படுத்துவதில் என்ன பிழை உள்ளது என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

9. தங்கைக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த அண்ணன்: பிறந்த சிறிது நேரத்திலே குழந்தை இறந்த சோகம்!

தாம்பரம் அருகே வீட்டில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்ட பெண்ணின் குழந்தை பிறந்த சில நிமிடங்களில் இறந்தது.

10. சிறந்த விளையாட்டு வீரர்கள் - ஒலம்பிக் போட்டியில் பதக்கம்

தமிழ்நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வைப்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.