ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am
author img

By

Published : Nov 1, 2021, 11:11 AM IST

1. வேளாண் பல்கலையில் மூலிகை நறுமணத் தோட்டம் - திறந்து வைத்த ஆளுநர்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், மூலிகை நறுமணத் தோட்டம் மற்றும் கள்ளி வகை தாவரத் தொகுப்பினைத் ஆளுநர் ஆர்.என் ரவி திறந்து வைத்தார்.

2. பள்ளிகளுக்கு விடுமுறை: மகிழ்ச்சியில் மாணவர்கள்

கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

3. ’இல்லம் தேடி கல்வி திட்டம்’ - 568 முனைவர்கள் விண்ணப்பம்!

முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்பட 1,28,161 பேர், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக இணைந்து மாணவர்களுக்கு கற்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

4. இன்று பள்ளிகள் திறப்பு - 600 நாள்கள் கழித்து பள்ளி செல்லும் மாணவர்கள்

நீண்ட நாள்கள் கழித்து இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படுவதால், மாணவர்களை வரவேற்கச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

5. டீசல் விலை உயர்வைக் கண்டித்து விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம்

டீசல் விலை உயர்வைக் கண்டித்து, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

6. 'கோயில் நகைகளை உருக்குவதற்கு அரசுக்கு உரிமை இல்லை' - கிருஷ்ணசாமி பேட்டி

தமிழ்நாட்டின் கோயில் நகைகளைத் தொட்டு உருக்குவதற்கு அரசுக்கு உரிமை இல்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

7. பாதுகாப்பு முதல் விவசாயம் வரை: மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோ ஷனா!

பாதுகாப்பு, தீயணைப்பு, மீட்புப் பணிகள், விவசாயம் என அனைத்து துறைகளிலும் பயன்படும் வகையிலான ரோபோ ஒன்றை ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார். அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் அதன் வடிவமைப்பு குறித்தும் ரோபோவின் கண்டுபிடிப்பாளர் ஈ டிவி பாரத் செய்தியாளரிடம் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

8. கரோனா கட்டுப்பாடுகள் எங்கே - கும்பலாக தீபாவளி பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் கரோனா கட்டுப்பாடுகளை மறந்து, பொருள்கள் வாங்க குவிந்துள்ளனர். பல நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியிருக்கும் வேளையில், இதுபோன்ற செயல்கள் கரோனா பரவலை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

9. 'நான் நலமாக இருக்கிறேன்...' - ரஜினி வெளியிட்ட ’ஹூட்’ வாய்ஸ் நோட்!

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும் தனது ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறி 'ஹூட்' செயலியில் தன் குரல் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

10. வெற்றிநடைப்போடும் ’4 Sorry’ - மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர்!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’4 Sorry’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.