ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am
author img

By

Published : Oct 19, 2021, 11:03 AM IST

1. பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் சோதனைகள் வழக்கமானவை - விஜயபாஸ்கர்

சோதனைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தாலும் அதிமுகவினராகிய நாங்கள் மனம் கலங்கமாட்டோம்; பொதுவாழ்வில் பயணிக்கும் எங்களுக்குச் சோதனைகள் வழக்கமானவை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2. இந்தி படிக்க கட்டாயப்படுத்திய சொமெட்டோ: மாறாத மொழி ஆதிக்க மனநிலை!

உணவு டெலிவரியில் ஏற்பட்ட தவறுக்குப் பணத்தைத் திருப்பி அளிக்கக் கோரிய வாடிக்கையாளரிடம், மொழி தெரியாததால் பணத்தைத் திருப்பி அளிக்க இயலாது என சொமெட்டோ வாடிக்கையாளர் சேவை மையம் பதிலளித்துள்ளது.

3. விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவரின் அலுவலகத்திற்குச் சீல்!

சென்னையில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்குத் தொடர்புடையவரான சந்திரசேகர் என்பவரது அலுவலகம் திறக்க முடியாத காரணத்தால் சீல்வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

4.சாலையைக் கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் கார் மோதி மரணம்

சென்னையில் சாலையைக் கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது வேகமாக வந்த கார் மோதியதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

5. பழனி மருத்துவமனையின் சுகாதாரமற்ற நிலை குறித்து கேள்வி: செய்தியாளர் மீது தாக்க முயற்சி

பழனி அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை முதன்மைச் செயலர் ஆய்வு செய்துகொண்டிருந்தபோது, அங்கு நிலவும் சுகாதாரமற்ற நிலை குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது, அவர்களின் மீது தனியார் துப்புரவுப் பணிகள் மேலாளர் தாக்க முற்பட்டார்.

6. பராமரிப்பில் குறைபாடு இருந்தால் ஒப்பந்தம் ரத்து: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சிப் பூங்காக்களில் பராமரிப்புப் பணிகளைச் சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த மாநகராட்சி, பராமரிப்புப் பணியில் குறைபாடுகள் இருந்தால் ஒப்பந்தம் ரத்துசெய்யப்படும் என எச்சரித்துள்ளது.

7. செலவு கணக்கை வேட்பாளர்கள் தாக்கல் செய்யாவிடில் 3 ஆண்டு தகுதிநீக்கம்

ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் செலவு கணக்கை வேட்பாளர்கள் தாக்கல் செய்யாவிடில் மூன்றாண்டுகள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

8.சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் ரூ.2 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் கணக்கில் வராத இரண்டு லட்சத்து இரண்டாயிரத்து 300 ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

9. தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை - சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன்

சிஎஸ்கே இல்லாமல் எம்.எஸ். தோனி இல்லை; எம்.எஸ். தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை எனச் சென்னை அணியின் உரிமையாளரும் ஐசிசி முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

10.'ஓ மணப்பெண்ணே' படவிழாவில் வலிமை அப்டேட் கேட்ட ஹரீஷ் கல்யாண்!

'ஓ மணப்பெண்ணே' திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது மேடையில் இருந்த நடிகர் அஜித்குமாரின் பிஆர்ஓவிடம், நடிகர் ஹரீஷ் கல்யாண் வலிமை அப்பேட் குறித்து கேட்க அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.