ETV Bharat / state

11 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 11 AM - 11 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்..

TOP 10 NEWS @ 11 AM
TOP 10 NEWS @ 11 AM
author img

By

Published : Aug 13, 2021, 11:23 AM IST

சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஒரே ஒரு கேள்விதான்: பிரதமரை குலுங்க குலுங்கச் சிரிக்கவைத்த சிறுமி

உங்களைச் சந்திக்க வேண்டும் என மின்னஞ்சல் அனுப்பிய சிறுமியை, உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி அழைத்துப் பேசிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தருணத்தில் சிறுமி எழுப்பிய ஒரு கேள்வி, மோடி உள்பட அங்கிருந்த அனைவரையும் சிரிக்கவைத்துள்ளது.

தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழ்நாடு பட்ஜெட் (வரவு-செலவுத் திட்ட அறிக்கை) வரலாற்றில் முதன்முறையாக இன்று (ஆகஸ்ட் 13) காகிதமில்லா வரவு-செலவுத் திட்ட அறிக்கை தாக்கல்செய்யப்படுகிறது. இதனை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்செய்கிறார்.

நூலிழையில் உயிர் பிழைத்த நபர்: திக்... திக்... காணொலி!

கடலூரில் சிதம்பரம் வண்டி கேட் பகுதியில் பைக்கில் வந்துகொண்டிருந்த நபர், மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் வேகமாக வந்த பேருந்தின் சக்கரத்தில் அவரது வாகனம் நசுங்கிய நிலையில், நூலிழையில் அவர் உயிர் பிழைத்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலின கிறிஸ்தவர்கள் மீது பாகுபாடு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கத்தோலிக் ஆர்ச் பிரிவில் பட்டியலின கிறிஸ்தவர்கள் மீது பாகுபாடு காட்டுவதைத் தடுக்கக் கோரிய வழக்குத் தொடர்பாக மத்திய அரசின் சமூக நீதித் துறைச் செயலர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சம்!

காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவர் நாமக்கல் எஸ்பி அலுவலத்தில் பாதுகாப்பு கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

போலி ரயில்வே பணி நியமன ஆணை: 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது

சென்னை: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி 12 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலியான பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட ஏழு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வந்தடைந்த ஒரு லட்சம் நியூமோகாக்கல் தடுப்பூசிகள்!

ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான ஒரு லட்சம் நியூமோகாக்கல் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

திருச்சி குடோனில் 550 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

திருச்சி: குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ குட்காவை, காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட டெல்லி சிறுமி: மீதமிருந்த உடல் பாகங்களை தகனம் செய்த பெற்றோர்

டெல்லி நங்கல் பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது உடலின் கைப்பற்றப்பட்ட மீதி பாகங்களை அவரது உறவினர்கள் தகனம் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.