ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 மணி செய்திச் சுருக்கம்
11 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 19, 2021, 11:16 AM IST

1 குடியரசுத் தலைவருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 19) டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். அப்போது, நீட் தேர்வு, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்.

2 வாகன சந்தையில் புரட்சி ஏற்படுத்துமா ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புக்கிங் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள், சுமார் ஒரு லட்சம் முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது எலெக்ட்ரிக் வாகனத்துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பாசுபதாஸ்திர ஹோமம்

சீர்காழியில் அமைந்துள்ள சட்டைநாதர் கோயிலில் உலக நன்மைக்காகவும், கரோனா தொற்று நீங்கிடவும் பாசுபதாஸ்திர ஹோமம் நடைபெற்றது. இந்த வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம் செய்தார்.

4 நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த இளைஞர்கள் கைது

மணலூர்பேட்டையில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

5 சேலத்தில் ரூ‌. 40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

சேலம் அருகே நடந்த வாகனத் தணிக்கையில் இரண்டு வாகனத்தில் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நேற்று (ஜூலை 18) பறிமுதல் செய்தனர்.

6 ஆரம்பமே அதகளம்- மோடி அரசுக்கு சாட்டையடி!

மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் மிதிவண்டியில் (சைக்கிள்) நாடாளுமன்றம் செல்வார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.

7 கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரம் பேர் கோவிட் பெருந்தொற்று வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

8 கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம்? தீயாய் பரவும் ஆடியோ!

தமிழ்நாட்டை போன்று அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பரவிவரும் ஆடியோக்கள் அம்மாநில அரசியலில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

9 இன்று மழைக்கால கூட்டத்தொடர்- 31 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், 31 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

10 சுரேஷ் ரெய்னா உறவினர்கள் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை உத்தரப் பிரதேச காவலர்கள் கைதுசெய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.